பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பெரியபுராணம்- ஓர் ஆய்வு முடத்தாமக் கண்ணியார் என்ற பெரும்புலவர் தம்மை ஒரு பொருநனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைக் கரிகாற் பெருவளத்தான் மேல் பாடுகிறார். அப்பாடலில் 67ஆம் அடி முதல் 81ஆம் அடிவரைத் தாம் மிக்க வறுமையால் வாடித் தம் சுற்றத்துடன் கரிகாலனை அடைந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு கூறுவதால் முடத்தாமக் கண்ணியாரை வறுமையில் வாடிய பாணர் கூட்டத்துள் ஒருவராகக் கொண்டு வாய்மொழி இலக்கியமாகப் பொருநராற்றுப்படையைப் பாடினார் என்பது நகைப்பிற்கு இடமாகும். பொருநராற்றுப்படையும், பட்டினப் பாலையும் கரிகாலனை அவன் காலத்திலேயே புலவர்கள் பாடிய பாடல்களாகும். பாணர் பாடல் (Bardic Poetry) என்பது என்றோ நடந்த வீர வரலாற்றை மரபுவழியாக வாய் மொழியில் பாடுவதாகும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக்கிக் குழம்புவது சரியன்று. முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார் போன்ற புலவர் பெருமக்களைப் பாண் புலவர்கள் என்பது பொருத்தமன்று. அப்படியானால் இவர்கள் ஏன் தம்மைப் பாணராகவும் பொருநராகவும் கூறிக்கொள்கிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது தற்புகழ்ச்சி கூடாதென்பதால் தம்மைப் பாணராகவும், பொருநராகவும் கூறிக்கொண்டனர். இரண்டாவது இவ்வாறு கூறிக் கொள்ளுதல் தமிழ்க் கவிதை மரபாகும். மேலும் ஆற்றுப்படை இலக்கணம் கூறும் தொல்காப்பியம், 'பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம் ' என்று கூறுவதால் இக் கவிதைகள் அம் மரபை விடாமல் கூறிச் சென்றன. இனிப் புறநானூற்றுக் கவிதைகளை வாய் மொழிக் கவிதை என்று கைலாசபதி கூறும் அடுத்த காரணத்தைக் d%5fTç8ğTÇUfTH), சங்கப் பாடல்களில் பல அடை அடுக்கி வருவது ஏன்?

  1. *

புறப்பாடல் போன்வற்றில் கருத்துக்கள், சொற்கள், அடைமொழிகள் என்பவை ஒரே மாதிரியாக உள்ளன. ஒரு சொல் அடை, இரு சொல் அடை, மூன்று சொல் அடை, ஓர் அடி முழுவதும் அடையாக வருதல் என்பவை வாய்மொழி இலக்கியத் தின் கூறுகளாகும். இது உண்மைதான். இந்த அடிப்படையில் புறப் பாடல்கள் பலவும் ஒரே மாதிரியான அடைச்சொற்களைக்