பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை - 55 I பெற்றிருந்த நெற் கூட்டைப் பிரித்து அந்த நெல்லை அனைவரும் உண்டு விட்டனர். ஊரில் இவ்வாறு நெற்கூடு பறிபோய்விட்டதை அறிந்த கோட்புலியாருக்கு வெகுளி பிறந்துவிட்டது. இறைவனுக்கென்று வைக்கப்பட்டுள்ள ஒன்றைப் பயன்படுத்தல் பெருந் தவறு. அன்றி யும் இறைவன் மேல் ஆணைவைத்துப் பாதுகாவலாக வைக்கப் பெற்ற அதனை எடுத்தல் அதனினும் பெருந்தவறாகும். எனவே தான் கோட்புலியாருக்கு வெகுளி பிறந்தது. தான் இங்கு நிகழ்ந்தவற்றை அறிந்திருந்தும், அறியாதவர், போல் ஊருக்குள் வந்தார். 'எதிர் கொண்ட தமர்க்கெல்லாம் இனிய மொழி பலபகர்ந்து மதிதங்கு சுடர்மணிமா ளிகையின் கண் வந்தணைந்து பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம் பைந்துகில் நிதியம் அதிகந்தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்றுரைத்து, "தந்தையார் தாயார் மற்று உடன் பிறந்தார் தாரங்கள் பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும் எந்தையார் திருப்படிமற்று உண்ண இசைந் தார்களையும் சிந்தவாள் கொடு துணித்தார் தீயவினைப் பவம் துணிப்பார்' " என்ற வகையில் அவர்களை விருந்திடுகிறேன் என அழைத்து அத் துணைப் பேரையும் கொன்று தீர்த்துத்தான் அவர் வெகுளி அடங்கியது. உவகை என்ற சுவை இறுதியாகத் தொல்காப்பியனார் குறிப்பது ചഖങ്ങ என்னும் சுவையாகும். இது ஸ்ருங்காரம் என்றும் கூறப்படும். மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் - 'செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கு ' எனக் கூறுகிறது தொல்காப்பியம் அல்லல் நீத்த என்ற சொல் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பொருள் கூறவந்த பேராசிரியர் 'அல்லல் நீத்த என்றமையின் பிறர் துன்பங் கண்டு உவகை பெறுதல் உவகை எனப்படாது' என்று கூறியுள்ளார். எனவே காமம்பற்றிய சுவையைப் பாடுவதிலும் நம்மவர் பெரிதும் கவனம் செலுத்தினர் என்று தெரிகின்றது. 37