பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 52 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வலிதில் ஒருவரைக் கூடுதல். அரசியல் காரணங்கட்காகத் திருமணம் புரிதல் முதலியவற்றை இவர்கள் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். சேக்கிழார் பிற சமயவாதிகள் போல் துறவைப் பெரிதெனப் போற்றாதவர். காரணம் இறைவனே உமையொருபாகனாக இருத்தலின் இல்லறம் விரும்பத்தக்கதன்று என்று கருதும் கொள்கையுடையவர் அல்லர். எனவே இன்பச் சுவையை நன்றாக எடுத்துப்பாடும் இயல்பினராவார். திருத்தொண்டத் தொகை பாடிய நம்பியாரூரர் பரவை, சங்கிலியார் என்ற இருவரை மணந்து இல்லறம் நடத்தியதை ஏனைய காப்பியங்கள் போலவே இன்பச் சுவை ததும்பப் பாடுகிறார். ஆனால் அழுகைச் சுவையைப் பாடும் போதும் இறைவனை மறவாமல் அவனை நினைந்து அழுவதாகத் திருமருகல் வணிகப் பெண்ணின் வரலாற்றைப் பாடியது போலலே, இன்பச் சுவை பாடும் போதும் இறைவனையும் திருவருட் குறிப்பையும் மறவாமல் பாடும் வல்லமை உடையார் காப்பியப் புலவர். பக்தன் வாழும் உவகை வாழ்க்கை தலைவன் தலைவியர் முதன் முறை ஒருவரை ஒருவர் சந்தித்துப் பிரிந்த நிலையில் ஒருவரை ஒருவர் நினைந்து தம்முள் பேசி மகிழ்தல் மரபாகும். அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும்என் நெஞ்சு “ என்று தலைவன் நினைந்ததாகக் குறள் பேசுகிறது. சுந்தரர் திருவாரூரில் பரவையாரை முதன் முறை சந்தித்தபின் என்ன நினைத்தார்? அந்த அம்மையார் இவரைப் பற்றி என்ன நினைத்தார்? என்பதைச் சேக்கிழார் பாடும் விதமே அலாதியான தாகும். பிறவிடங்களில் ஒன்பதாவது சுவையாகிய பக்திச் சுவையைப் பாடுவது எளிது. தில்லைக் கூத்தனின் திருநடம் கும்பிட்டார் என்று கூறும் பொழுது பக்திச் சுவை பொதுளப் பாடுவது யார்க்கும் எளிது. ஆனால் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் பார்த்தபின் நினைவு கூரும் செய்தியில் பக்திச் சுவையை மறவாமல் பாடவேண்டுமாயின் அது தொண்டர்சீர் பரவவல்ல சேக்கிழாருக்கே இயல்பான ஒன்றாகும். 'கற்பகத்தின் பூங்கொம்போ! காமன்தன் பெருவாழ்வோ? பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல் சுமந்து