பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 55 5 விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ? அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்' என்ற முறையில் சுந்தரர் மனம் நினைக்கின்றது. 'முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகொளியால் தன்னேர் இல் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ? மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ? என்னே? என் மனந்திரித்த இவன் யாரோ?' ' என்ற முறையில் பரவையார் மனம் எண்ணுகின்றது. இங்குக் கூறப் பெற்ற கற்பனை பிற கவிஞர்களும் பாடுவதுதான் எனினும் "அற்புதமோ?' 'சிவனருளோ? என்றும் 'செஞ்சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ?’ என்றும் பாடுவது சேக்கிழார் ஒருவருக்கே முடியும். இருவரும் கண்டு பிரிந்த பின்னர் ஒருவர் மற்றவரை 'எங்கே சென்றாரோ?' என்று நினைத்து வருந்துவ தும் பாடலில் இடம் பெறும். அத்தகைய சந்தருப்பங்களிலும், 'பாசமாம் வினைப்பற்று அறுப்பான்மிகும ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர் தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே!' 'பந்தம் வீடு தரும் பரமன் கழல் சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை வந்து மால் செய்து மான் எனவே விழித்து எந்தையார் அருள் எவ்வழிச் சென்றதே? " என்ற முறையில் தலைவர் வருந்தினார் எனவும், 'தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரிர் நீரே அல்லால் ஆர் என் துயரம் அறிவார்: அடிகேள்! அடியேன் அயரும் படியோ இதுதான்? நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் திரை வெண் தலையின் புடையே ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலார்போல் யானோ உறுவேன்: '