பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்ற முறையில் தலைவி வருந்தினாள் என்றும் பாடுவது சேக்கிழாருக்கே முடிவதாகும். இறைவன் ஆணையால் திருமணம் முடிந்த பிறகு இருவரும் இன்பம் துய்த்து வாழ்ந்தனர் என்று கூறவரும் சேக்கிழார், ‘தென்னாவ லூர்மன்னன் தேவர் பிரான் திருவருளால் மின்னாருங் கொடி மருங்குல் பரவையெனும் மெல்லியல்தன் பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோக பரம்பரையின் வைகினார்’ 1 0 8 என்று பாடுவதைக் கூர்ந்து நோக்கல் வேண்டும். மனைவியிடம் பெறும் இன்பங்கூட யோகமாக மாற்றப்படலாம். பக்திச் சுவை பாடவரும் கவிஞர் எதனையும், சிற்றின்பத்தையுங்கூடப் பேரின்பத்தை அடையும் வழியாக மாற்றிவிட முடியும் என்பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும். இனிக் காதலியுடன் புனல் விளையாட்டு ஆடுவதும், அதன் முடிவில் நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடுவதும் செய்தார் என்று கூறுகிறார். எதனைச் செய்வதாயினும் இறைவனுடைய நினைவு மனம், அகமனம் என்பவற்றில் நிறைந்து இருக்கும்; அதுவே இந்நாட்டுப் பக்தர்கள் கண்ட நெறியாகும். பக்தர்களாக இருப்பவர்கள் கந்தை மிகை என்ற கருத்துடனும் இருக்கலாம். அதன் மறுதலை iLifТ4, 'அந்தரத்து அமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்திச் சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச் சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலன்கள் சாத்தி இந்திரத் திருவின் மேலாம். எழில் மிகவிளங்கித் தோன்ற' ‘கையினில் புனை பொற்கோலும் காதினில் இலங்குதோடும் மெய்யினில் துவளுநூலும் நெற்றியில் விளங்கு நீறும் ஐயனுக்கு அழகிதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச் சைவ மெய்த் திருவின்கோலத் தழைப்பவி தியினைச் சார்ந்தார்’ 10 9 என்ற முறையில் எல்லாவிதமான செல்வ, இன்ப அனுபவத்துட னும் பக்தன் இருக்க முடியும் என்பதைக் கவிஞர் இங்குக் காட்டு கிறார். ஒருசில சமயங்களைப் போல எல்லாவற்றையும் துறந்து விட்டு, உடலை வருத்திக் கொண்டால்தான் உய்தியடைய முடியும் என இந்நாட்டுப் பக்தர்களும், சேக்கிழாரும் நம்பவில்லை. இத்துணை அலங்காரங்களுடன், இரு மனைவியரை மணந்து வாழ்ந்த சுந்தரர், சேரமான் பெருமாளுடன் இருக்கையில் திடீரென்று அனைத்தையும் ஒரே வினாடியில் துறந்துவிட்டுக்