பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 555 கயிலைக்குப் புறப்பட்டு விட்டார். குடும்பம் நடத்துகையில் பரவை வருந்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட சுந்தரர் ஒரே வினாடியில் அனைத்தையும் மறந்து புறப்பட்டு விடுகிறார். இதுவே உள்ளத் துறவு என்று கூறப் பெறும். எனவே தான் கவிஞர் பாடும் இன்பச் சுவையும், பக்திச் சுவையும் இரண்டறக் கலந்து விளங்குகின்றன. இந்தப் பக்தர்களின் வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத பகுதி ஒன்றும் உண்டு. திருவொற்றி யூரில் சங்கிலியாரை இரண்டாம் மனைவியாக மணந்து எவ்வாறு வாழ்ந்தார் என்று கூறவந்த காப்பியக் கவிஞர், 'புண்டரிகத் தவள்வனைப்பைப் புறங்கண்ட து நலத்தைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அமர்ந்திருந்தார் காதலினால்.’ 'யாழின் மொழி எழின்முறுவல் இருகுழைமேல் கடை பிறழும் மாழைவிழி வனமுலையார் மணியல்குல் துறை படிந்து வீழுமவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண் ஊழியாம் ஒரு கணந்தான். அவ்வூழி ஒருகணமாம் " என்ற முறையில் இவ்வாறு இல்லற இன்பங் கண்டவர் அதிலேயே தங்கி விடவில்லை என்பதையும் அடுத்துக் கூறுகிறார். சங்கிலியுடன் வாழுங் காலத்தே செழுந்தென்றல் காற்றுத் தொடங்கியவுடன், 'பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்றிடங்கொண் டிருந்தாரை நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரைப் பாங்காகத் தாம்முன்பு பணியவரும் பயன்உணர்வார் ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார். ' எனவே எத்தகைய இன்பத்தில் திளைத்தாலும் 'முத்தர் மனம் இருக்கும் மோனத்தே' என்று கூறுவதுபோல் இந்தப் பக்தர்கள் மனம் இறைவனிடமே லயித்திருந்ததை அறிய முடி கின்றது. பக்திச் சுவையின் முழு வெளிப்பாடு திண்ணனார் வாழ்க்கையில் பேசப் பெறுகிறது தொண்டர் வாழ்க்கையின் அடிக்கல்லாக அமைவது பக்தி யாகலின் அவர்கள்பற்றிப் பாடும் சேக்கிழாரும் அதனை மறவா