பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ56 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மலே வாய்ப்பு நேரும் இடம் எல்லாம் பக்திச் சுவை கனியப்பாடும் இயல்பைப் பெற்றிருந்தார். பக்தி, சமயம் என்பவைபற்றி நினைக்கவும் முடியாத வேட்டையாடுதல் பற்றிக் கூறும் பகுதியிலும், ஒன்பதாவது சுவை யாகிய பக்தி, அதுதோன்றும் நிலைக்களமாகிய சமயம், அதன் தத்துவங்கள் என்பவற்றை விடாமல் பேசும் இயல்பை இக்கவிஞரி டம் காணலாம். கண்ணப்பர் வேட்டையாடும் சிறப்பினைக் கூறவரும் கவிஞர் ஒர் அற்புதமான உவமையைக் கையாண்டு சைவ சமயத்தின் தத்துவம் ஒன்றை வெளியிடுவதைக் காண முடிகிறது. வேட்டையாடுபவர்கள் சுற்றிலும் வலையைக் கட்டுவார்கள். அந்த வலைக்கு அப்பால் வேட்டை நாய்கள் வட்டமாக நிறுத்தப் பெறும். மறைவாகச் சென்று வேடுவர்கள் தாரை தப்பட்டை முதலியவற்றை ஒலித்து மறைந்து வாழும் விலங்குகளை வெளியே வெருட்டுவர். தலை தெறிக்க ஒடும் விலங்குகளிற் பலவும் வலை யில் சிக்கிவிடும். ஒருசில அந்த வலைகளையும் அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றால் அடுத்த வட்டத்துள் நிற்கும் வேட்டை நாய்களிடமிருந்து தப்ப முடியாது. வேட்டையாடுப வர் செய்யும் இந்தச் செயலைப் பாடும்பொழுதுகூடச் சேக்கிழார் ஒரு மாபெரும் தத்துவத்தை இதிற் பெய்து ஒர் உவமையைப் பேசுகிறார். - வலுவான நல்வினை தீவினை என்ற இரண்டு வலைகளுள் அகப்பட்டுத் தவிக்கும் ஆன்மா விடுதலையை நாடிச் செல்லும் போக்கில் இந்த இருவினைகள் என்ற வலையை ஒரோவழி அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றால் புலன்கள் என்று கூறப் பெறும் வேட்டை நாய்களால் கவரப் பெற்றுவிடுகிறது என்ற பொருள் அமைய, 'பலதுறைகளில் வெருவரலொடு பயில் வலையற நுழைமா உலமொடுபடர் வனதகையுற உறுசினமொடு கவர் நாய் நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல்பவர் நெறிசேர் புலனுறுமனன் இடைதடை செய்த பொறிகளின் அளவுளவே '’ என்று பாடுவதைக் காண முடிகிறது. ஆறு நாளில் கண்ணை இழந்து இறைவனுக்கு அப்பக் கூடிய நிலையை அடையப் போகின்ற திண்ணனார்காளத்தி மலையை