பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 557 அதற்கு முன் கண்டதில்லையாகலின் உடன் வந்த நாணனை அது பற்றி விசாரித்தார். அவன், காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச் சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம்....' என்று கூறினான். 'ஆவது என்? இதனைக் கண்டு இங்கு அனைதோறும் என்மேற் பாரம் போவதொன்று உளது போலும்! ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே? போக என்றார் திண்ணனார் தாம் ' நாணனும் திண்ணனாரும் மலையை நோக்கிப் புறப்பட்டு விட்டனர். செல்லும் அவருடைய மனநிலையைப் பக்திச் சுவை பாடவல்லார் படம் பிடித்துக் காட்டுகிறார். 'முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கி என்புநெக் குருகிஉள்ளத்து எழுபெரு வேட்கை யோடும்' 'நானனும் அன்பும் நளிர்வரை ஏற. * அன்பே வடிவாக மாறிவிட்ட திண்ணனாருக்கு நாணன் வழிகாட்டிக்கொண்டு'முன்னே சென்றான். அவ்ர் அவனைத் தொடர்ந்து பின்னே சென்றார் என்று கூறச் சேக்கிழாருக்கு மனம் வரவில்லை. எனவே நாணனும் அவருடைய அன்பும் முன்னே சென்றன; அவர் உடல் பின்னே சென்றது என்கிறார். பக்தி என்பதை முன்னர்க் கேட்டும் அறிந்திராத திண்ணனார் திடீரென்று குடுமித் தேவர் என்ற பெயரைக் கேட்டவுடன் மாறத் தொடங்கிவிடுகின்றார். குடுமித் தேவரைப்பற்றி நாணன் விபரம் கூறக்கூற அவர் மாற்றம் வளர்ந்து கொண்டே வருகிறது. அங்குக் குடுமித் தேவரைக் கண்டதும் அவர்மேல்.