பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இருந்த பச்சிலை பூ முதலியவற்றின் தொடர்பு அவருக்குத் தெரிய நியாயம் இல்லை. எனவே உடன்வந்த நாணன், 'வன்றிறல் உந்தையோடு மாவேட்டை ஆடிப் பண்டுஇக் குன்றிடை வந்தேம் ஆக, குளிர்ந்த நீர் இவரை ஆட்டி ஒன்றிய இலை பூச் சூட்டி ஊட்டிமுன் பறைந்து ஒர் பார்ப்பான் அன்றிது செய்தான்; இன்றும் அவன் செய்ததாகும்' - என்றான். ' கொல், எறி, குத்து, வெட்டு என்ற சொற்களை அல்லாமல் பிற சொற்களை அறியாத திண்ணன் இந்த அளவு கேள்வியுற்ற திலிருந்து முழுவதும் அன்பு வடிவினனாக மாறிய வரலாற்றைச் சேக்கிழார் இவ்வளவு விரிவாகப் பாட உதவியது திருநாவுக்கரச ருடைய ஒரு பாடலாகும். அகத்துறையில் அமைந்த அப்பாடலின் விளக்கவுரையாகவே கவிஞர் இந்த வரலாற்றைப் பாடிவிடு கிறார். தலைவி தலைவனிடம் ஆட்படும் விதத்தை விளக்குவார் போல நாவரசர் ஒரு பக்தனுடைய வளர்ச்சியைத் தொடக்கத்தி லிருந்து முடிவுரை வரை ஒரே பாடலில் கூறிவிடுகிறார். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள், பேர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடத்தார். ஆசாாரத்தை, தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், - தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' இப்பாடலின் நுண்மையான விளக்கமாகவே திண்ணனின் வரலாற்றைப் பாடிச் செல்கிறார். குடுமித் தேவரைக் கண்டதுமே தன்னை மறந்து, தன்நாமம் கெட்டு, அன்பு வடிவாகி விட்ட திண்ணனார், தேவருக்குப் பசிக்கும் என்ற நினைவால் உந்தப்பெற்றுக் கீழே வந்து உடன் வந்த காடன் சுட்டு வைத்துள்ள பன்றி இறைச்சியை எடுத்து இலையில் வைக்கும் நேரத்தில் காடன் கேட்ட வினா எதுவும் அவர் காதில் ஏறவில்லை. ஒன்றும் புரியாமல் இருந்த காடனுக்கு, உடன் சென்ற நாணன் விளக்கம் தருகிறான். 'அங்கிவன் மலையில்தேவர் தம்மைக்கண்டு - அனைத்துக்கொண்டு வங்கினைப் பற்றிப்போகா வல்லுடும்பு என்னநீங்கான்