பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை - 559 இங்கும்அத் தேவர்தின்ன இறைச்சிகொண்டு ஏகப்போந்தான் நங்குலத் தலைமைவிட்டான் நலப்பட்டான் தேவர்க்கு' என்றான் என்ற பாடல் மூலம் தன்னை மறந்து தன்னாமம் கெட்டு நின்ற நிலையையும் காட்டுகிறார். கண்ணப்பர் வரலாற்றில் பக்தி அனுபவம் பற்றியும் அது தோன்றி முதிர்கின்ற முறைபற்றியும் விரிவாகப் பேசிய கவிஞர் மற்றொரு தத்துவத்தையும் குறிப்பர்க வும் வெளிப்படையாகவும் பேசுவதுபற்றிப் பின்னர் ஆராயப் படும். நடுவு நிலைமை என்ற சுவையையும் நாவரசர் வாழ்க்கையில் வைத்துக் காட்டுகிறார் இனி ஒன்பதாவது சுவையாகிய பக்திச் சுவைபற்றி விரிவாகப் பாடிய கவிஞர், நாடக நூலார் ஏற்காத பத்தாவது சுவையாகிய நடுவுநிலைமை பற்றியும் மிகச் சிறப்பாகப் பாடிச் செல்கிறார். இன்பம், துன்பம் என்ற இரண்டிலும் மனந்தளராமல் இருப்பதே நடுவுநிலமை எனப்பெறும். அடியார்கள் அனைவரும் துன்பங் கண்டு கலங்காதவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அத் துன்பத்தை எதிர்த்துப் போராடித் தம் கொள்கையை நிலை நிறுத்த முயன்ற வரலாறுகள்தான் பெரியபுராணம். அப்படி எதிர்த்துக்கூடப் போராடாமல் அதனையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட ஒரு வரலாறே திருநாவுக்கரசர் வரலாறாகும். சமயம் மாறிய அவர் திருவதிகை வீரட்டானத்தில் தங்கி யிருக்கும்பொழுது மன்னன் ஆணையைக் கொணர்ந்த ஏவலனை அவர் இகழாமல், 'நாமார்க்கும் குடியல்லோம் என்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்’ i 19 என்று கூறும் சேக்கிழார் அவர்கள் வேண்டியவுடன் தடை ஏதும் கூறாமல் அவர்களுடன் சென்றார் என்று பாடுகிறார். தம்மை அழைத்துச் செல்லாமல் தனியே சென்றால் அரச தண்டனை அவர்கட்குக் கிடைக்குமே என்ற கருணையால் அவர்கள் பின் சென்றார் என்று அறிய முடிகிறது. பிறர் துயரம் அடையாமல்