பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 பெரியபுராணம் - ஒர் ஆய்வு காக்கத் தாம் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் உயரிய பண்பை இச் செயல் அறிவிப்பதாகும். நீற்றறையில் இடப்பட்டபோதும், 'ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத்து அமுதுண்டு தெளிவெய்தி ஊன்ந்தான் இலராகி உவந்து இருந்தார். ' என்று கவிஞர் பாடுகையில் உடல் ஊனம், மன ஊனம் என்ற இரண்டுமே இல்லாமல் பக்தர் இருந்ததைக் குறிப்பால் பெற வைக்கின்றார். சமண சமயத்தில் இருந்த பொழுது அவர்கள் நூல்களையெல்லாம் கற்று அவற்றில் தேர்ச்சிபெற்று, பெளத்தர் களை வாதில் வென்று 'தருமசேனர் என்று பட்டம்பெற்ற நாவரசர் இப்பொழுது அரச ஊழியர்கள் துன்புறலாகாது என்ப தற்காக அவர்களுடன் சென்று, நீற்றறையில் இடப்பட்ட போதும் உடல், மன ஊனம் இல்லாமல் இருந்தார் என்று கூறுகை யில் அவருடைய அதீத வளர்ச்சியைக் கவிஞர் கோடிட்டுக் காட்டுகிறார். மன ஊனம் இன்மை என்பது தம்மை நீற்றறை யில் இட்டவர்கள்பால் சினமோ காழ்ப்புணர்ச்சியோ கொள்ளா மல் இருந்துவிட்ட நிலை. இதுவே நடுவுநிலை எனப்பெறும். ஒரு பக்தர் முழுவதாக வளர்ச்சி அடைந்து விட்டதை அறிவிக்கும் அடையாளம் இதுவேயாம். தாம் கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், உறுதியுங் கொண்டிருந்த இப் பெருமகனார் சமணர்களுடன் வாதிட்டு மன்னனின் எதிரே அவர்களை வென்றிருக்கலாம். அவர்கள் எதிரே எதையும் தாங்கி வெல்லும் தமதாற்றலைத் தெரிவித் திருக்கலாம். அப்படிச் செய்திருப்பின் மன்னன் உடனேயேகூடச் சமயம் மாறிச் சைவனாகி இருப்பான். அது ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. சத்யாக்கிரகிகள் மேற்கொள்ளும் வழி அதுவா கும். சாதாரண மனிதர்களின் செயல்கட்குக் காரண காரிய ஆராய்ச்சி செய்வதுபோல இப் பெருமக்கள் செயலை ஆய முடியாது. ஆகவேதான் அவர் இக் கொடுமைகளை எதிர்த்துப் போராடாமல் வாளா இருந்துவிட்டார். ஒவ்வொரு கொடுமை யிலும் இறையருளால் அவர் வெற்றி பெற்றாலும் தீமையை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அவர் இறுதிவரை நினைத்த தாகவோ முயன்றதாகவோ தெரியவில்லை. எனவே இந் நாட்டைப் பொறுத்தவரை மகாத்மா காந்திக்கு, ஆயிரத்து இருநூறு ஆண்டுகளின் முன்னரே சத்யாக்கிரகம் என்றால் என்ன என்பதை வாழ்க்கையில் நடத்திக்காட்டிய பெருமை தமிழராகிய நாவரசரையே சாரும். தாம் சிலகாலம் மேற்கொண்டு வாழ்ந்த