பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 36 5 கொண்டு திகழ்கின்றன. எனவே இவை வாய் மொழிப் பாடல்கட் குரிய இயல்பைப் பெற்றிருக்கின்றன” என்கிறார் அவர். இது ஒரு போலி வாதம். இங்ங்னம் பல கவிதைகளில் ஒரே வகையான அடைவருதல் வாய் மொழி இலக்கியத்தின் இயல்பு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆன்ால் இதனை மாற்றிக் கூறும்பொழுது நிலைமை மாறிவிடும். அதாவது ஒரே வகை அடைச் சொற்கள் வருவது வாய்மொழி இலக்கியத்தின் இயல்பு. ஆனால் ஒரே வகை அடை வருவனவற்றையெல்லாம் வாய்மொழி இலக்கியம் என்று கொள்வதும் தவறு. இலக்கியம் நன்கு வளர்ச்சியடைந்து இலக்கியம் காப்பியமாக மலர்கின்ற நிலையிலும்கூட இந்த அடைச்சொற்கள் ஒரே மாதிரி வருவதைத் தடுக்க முடியாது என்று, கைலாசபதி தமக்கு ஆதாரமாகக் கொள்ளும், மில்மன் பேரியே 'கூறுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டின் பின்னர்த் தோன்றிய கம்ப ராமாயணம், சிந்தாமணி, சூளாமணி முதலியவற்றிலும் இந்த அடைச் சொற்கள் ஒரே மாதிரியாக அனைவராலும் கையாளப் படுவதைக் காண முடியும். இவ்வாறு வருவதற்கு ஒரு காரணமும் உண்டு. கவிஞன் சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் அடுக்கியே கவிதை புனைகிறான். ஒரு குறிப்பிட்ட பொருளை ஒரே கவிஞன்கூடப் பல இடங்களில் பல்வேறு அடையுடன் கூறுகின்றான். இறுதியாக இப்பல்வேறு அடைகளுள் ஒன்றோ இரண்டோ மிகப்பொருத்தமாக அமைந்து விடுதலின் பலர் மனத்திலும் அந்தக் குறிப்பிட்ட அடையுடன்அச்சொல் பதிந்து விடுகிறது. பின்னர் வருபவர்கள் அதில் ஈடுபட்டுத் தாமும் அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தேவை வரும்பொழுது முன்னர்ப் பயன் படுத்தப்பெற்ற அதே அடையுடன் சேர்த்தே பயன்படுத்துகின்றனர். எனவே இது கொண்டு அடைகள் ஒன்று போல வருவதால் தொகுத்து வைக்கப்பெற்ற (Stock phrases) அடைகள் என்றும், இது வாய்மொழி இலக்கியத்துக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் சரியன்று. குறும்பாடல்கள் நாளாவட்டத்தில் நெடும்பாடல்களாக வளர்ந்தன. ஐங்குறுநூறு போன்ற சிறிய பாடல்களில் தோன்றி நாளா வட்டத்தில் அகப்பாடல் போன்ற நீண்ட அடிகளைக் கொண்டு அகத்திணைப் பாடல்கள் வளர்ந்தன. ஆனால் புறத்திணைப் பாடல்களில் அகத்திணை போல உணர்ச்சி வெளிப்பாட்டைக் காட்ட வேண்டிய தேவை இன்மையின் அடிவரையறை இல்லாது