பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 6 I சமண சமயத்தின் நெளிவு சுளிவுகளை நாவரசர் நன்கு அறிந் திருப்பார். எனவே அவர்களை எதிர்த்துப் போராடுவது அவருக்கு எளிதாக இருந்திருக்கும். தம்மைத் துன்புறுத்தல் அவர்கள் கூறும் அஹிம்சைக் கொள்கைக்கு எதிரானது என்பதை மன்னனுக்குத் தருக்க ரீதியாக எடுத்துக் காட்டியிருக்கலாம். ஆனால் இவை ஒன்றையும் அன்பர் செய்ய விரும்பவில்லை. தொண்டர்கள் வளரும்பொழுது பல்வேறு பழிகளை மேற்கொள் கின்றனர். இத்தனைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தவர் நாவரசர். இக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி இறுதிவரையில் சென்று அவர்களை வெற்றி கொண்டவர் சம்பந்தர். முற்றிலும் மாறுபட்ட இந்த இரண்டு வழிகளைக் கடைப்பிடித்த இந்த இருவரும் ஈடு இணையற்ற நண்பர்கள். ஒருவர் சென்ற வழியில் மற்றவர் தலையிடவில்லை. தாம் செல்லும் வழிதான் சரியானது என்று மற்றவரை மாற்றஞ் செய்ய விரும்பவோ, முயலவோ இல்லை. உண்மையான பக்தர் கள் இந்த அடிப்படையை நன்கு உணர்ந்திருந்தனர். குறிக்கோளை அடையப் பல வழிகள் இருத்தலின் தாம் சென்ற வழிதான் உயர்ந்தது என்றும், மற்றவர்களும் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்தப் பக்தர்கள் ஒரு நாளும் கருதிய தில்லை. இந்த நுணுக்கத்தைச் சேக்கிழார் நன்கு அறிந்திருந் தார் என்பதையும் நாம் உணரவேண்டும். இதனை அடுத்து அவர்கள் விடங்கலந்த உணவை ஊட்டியும், யானையைவிட்டு இடறச் செய்தும், கல்லுடன் கட்டிக் கடலில் பாய்ச்சியும் தம் பகைமையைத் தீர்த்துக் கொள்ளச் செய்த அத்தனை முயற்சிகளிலும் அவர் தேர்ந்த சத்யாக்கிரகியாகவே நடந்து கொண்டார். இத்துணையும் செய்தவர்களையோ, அவர் கள் தூண்டுதலால் அவற்றைச் செய்வித்த அரசனையோ அவர் குறை கூறவோ, எதிர்த்துப் போராடவோ இல்லை. சமண சமயத்தின் உட்கோளும் உயிர் நாடியுமான 'அஹிம்லா பரமோதர்மா என்ற உபதேசத்தை முழுவதுமாகக் கடைப் பிடித்தவர் அச் சமயத்தை விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டவ ரான திருநாவுக்கரசரே யாவார். இத்தனைக் கொடுமைகளைச் செய்தபொழுது எல்லாம் இறைவனிடம் கொண்ட ஆழமான பக்தி காரணமாக அவற்றை எல்லாம் வென்று மீண்டார். இவை நடைபெறும் பொழுதெல்லாம் இன்ன இன்ன திருப்பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகிறார். ஆனால் அவ்வப்பொழுது பாடியதாகக் கூறப்படும் அந்த அந்தப் பதிகங்களில் இந்நிகழ்ச்சிகள் நடந்ததாக