பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 62 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ர் அகச்சான்றும் இல்லை. நீற்றறையில் இட்டபொழுது மாசில் வீணையும் பதிகமும், அதேபோல ஒவ்வொரு நிகழ்ச்சி யிலும் ஒரு குறிப்பிட்ட பதிகமும் பாடியதாகச் சேக்கிழார் அறிவிக்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இப்பதிகங்களிற் குறிக்கப் படாமைக்குக் காரணம் கூறவந்த உரையாசிரியர் சிவக்கவி மணியவர்கள், செல்லறித்து மறைந்த பதிகங்தஐட்பட்டு அஞ்ஞான்று நாயனார் பாடியருளிய பதிகம் மறைந்தது ' என்று கூறுவது பொருத்தமாகப் படவில்லை. நாயனார் அவற்றைப் பதிகங்களில் குறியாமல் வேண்டுமென்றே விட்டுவிட்டார் என்று கூறுவதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. நாவரசரின் வளர்ச்சி முறையைச் சேக்கிழார் காட்டிச் செல்லும் திறத்துக்கு இதுவே தக்கதாகும் என்று கூறினால் தவறு ஒன்றும் இல்லை. இத் துன்பங்கள் தமக்கு இழைக்கப்படுகின்றன? என்ற நினைவு வந்தாலே அவை யாரால் இழைக்கப்படுகின்றன? என்ற வினா அடுத்துத் தோன்றும். துன்பத்தை அனுபவிப்பதாக நினைத் தாலே அதனைச் செய்தவர்கள் மேல் வெறுப்பும் சினமும் தோன்றத்தான் செய்யும். இவை வராமல் காக்கவேண்டுமானால் நன்றல்லவை நடைபெறும் அதே நேரத்தில் கூட அவற்றை நினையாமல் இருப்பது ஒன்றுதான் வழியாகும். மனம்தான் இத்தனைக்கும் காரணம். எனவே நீற்றறையில் உடல் இருந்தாலும் 'மாசில் வீணை, மாலை மதியம், வீசுதென்றல் முதலியவற்றை ஆழமாக நினைவில் இருத்திவிட்டால் நீற்றறை அனுபவம் துன்பம் விளைவிப்பதில்லை. அடிகள் இதனையே செய்தாராகலின் பாடலில் நீற்றறை வரவில்லை என்பதை அறிதல் வேண்டும். இவ்வாறு கூறுவதால் இக் கொடுஞ் செயல்கள் எதுவுமே நிகழவில்லை போலும் என்ற முடிவுக்கு வருவதும் தவறாகும். இந்நிகழ்ச்சிகள் நடந்து பல்லாண்டுகள் கழித்து நாயனார் அதுபற்றி ஏதோ நினைவுவரச் சாதாரண விஷயத்தை நினைவு கூர்ந்து சொல்லுபவர்போல இதனையும் குறிக்கின்றார். 'துஞ்சிருள் காலைமாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும் வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர்தந்த நஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே' என்றும் 'கல்லினோடு எனைப்பூட்டி அமண்கையர் ஒல்லைநீர்புக நூக்களன் வாக்கினால்