பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 563 நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே ' என்றும் பாடுவது அசைக்கமுடியாத அகச் சான்றுகளாகும். இவை இரண்டு பாடல்களிலுமே சமணர்கள் எவ்விதமான அடைமொழி யுமின்றிக் குறிக்கப்படுவது கவனிக்கத் தக்கது. எத்துணைக் காலங் கழித்து நினைத்துப் பார்த்தாலும் மனத்தில் கசப்பையும் வெறுப்பையும் தரும் இச் செயல்களைச் செய்தவர்களை எத்தகைய கடுமையான அடைமொழியுந் தராமல் நாயனார் பாடினார் என்றால் நடுவுநிலைமை என்ற மனநிலையில் மிகச் சிறந்த உயரத்திற்கு வளர்ந்துவிட்ட அவருடைய இயல்பை அறிவிக்க இதுவே போதிய சான்றாகும். நாயனாருக்குப் பிறகு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த சேக்கிழார்கூட இக் கொடுமைகளைச் செய்தவர்களை மிகக் கடிய சொற்களால் சாடுகின்றார். ஆனால் இக் கொடுமைகள் யாருக்கு இழைக்கப் பட்டனவோ அவர் அதுபற்றி ஒன்றுமே கூறவில்லை என்பதை அவருடைய பாடல்களும், பெரியபுராணமும் கூறுகின்றன. இந்த முறையில் இதுபற்றிச் சிந்திக்காமையாலும், ஆழ்ந்த சைவ சமயப் பற்றாலும் உந்தப் பெற்றமையின் உரையாசிரியர் திரு.சி.கே. எஸ் அவர்கள் இவற்றுக்குரிய பாடல்கள் அழிந்துபட்டன என்ற முடிவுக்கு வருகிறார். அடிகள் பற்றிய இப்பாடல்கள், நடுவுநிலமை என்ற சுவையையும் சேக்கிழார் அற்புதமாகக் கையாள்கிறார் என்பதை அறிய உதவுகின்றன. அடிக்குறிப்புக்கள் தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3(பேராசிரியர் உரை) சேக்கிழார் பிள்ளைத் தமிழ் 28 கம்பராமாயணம் 37 63 கம்பராமாயணம் 38 05 கம்பராமாயணம் 1968 திருநாவுக்கரசர் புராணம் 140 திருநாவுக்கரசர் புராணம் 167