பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை சங்கப் பாடல் காட்டும் சமுதாய வாழ்க்கை ஒரு பெருங் கவிஞன் தான் வாழுங் காலத்தையும் அதற்கு முற்பட்ட காலத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளான் என்பது திறனாய்வாளர் கண்ட முடிவாகும். அந்த முறையில் கண்டால் இரண்டாம் நூற்றாண்டை ஒட்டிய கால கட்டத்தில் தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதார சமய நிலையினை அறிந்து கொள்ளச் சிலம்பு பேருதவி செய்கின்றது எனக் காணமுடியும். பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி ஆகிய நெடும்பாடல் களும் அவை தோன்றிய காலகட்டத்தில் பொதுவாகத் தமிழகத் திலும், சிறப்பாக அப்பாடல்கள் குறிக்கும் பகுதிகளிலும், வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறை, சமுதாயப் பிரிவினைகள் பழக்க வழக்கங்கள், உணவு முறை, மேற்கொண்ட தொழில்கள் என்பவற்றைப்பற்றி விரிவாகப் பேசிச் செல்கின்றன. ஆனால் சிலம்பையடுத்துத் தோன்றிய காப்பியங்கள் வட நாட்டுக் கதையைப் பாட எடுத்துக் கொண்டமையால் போலும், இந்நாட்டு மக்கள் வாழ்க்கை முறையை அதிகம் பேசாமல் விட்டு விட்டன. இக் குறையைக் கம்பநாடன் போக்குகின்றான் என்பது உண்மைதான். அவன் எடுத்துக் கொண்ட நாடு கோசலமாயினும் அவன் கூறியது தமிழ் நாட்டையே யாம். தமிழக மக்கள், வாழ்க்கை முறை, பொருளாதாரம், குறிக்கோள் கள் என்பவற்றையே கம்பன் பேசுகிறான். சேக்கிழாரைப் பொறுத்த மட்டில் ஏனைய புலவர்களைப் போல் இருந்த இடத்தில் இருந்தபடியே பாடியவர் அல்லர். இத் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து, கல்வெட்டுக்கள், அரசர்கள், குடிமக்கள் என்பவர்களுடைய ஆவணங்கள் என்பவற்றையெல் லாம் பழுதறக் கற்றுத் தேர்ந்தார். எனவே அவர் தமிழகச் சமுதாய அமைப்பை எடுத்துக் கூறினால் அது அந்நாளையத் 38