பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தமிழகத்தின் சமுதாய வரலாறாகவே (Social History) கொள்ளப்படலாம். பக்திச் சுவை சொட்டக் காப்பியம் இயற்றி னார் என்பதால் அது நடைமுறை வாழ்க்கையைக் குறிக்காமல் கற்பனை உலகில் உலாவரும் காப்பியமாக இருந்துவிடும் என்று நினைப்பது தவறாகும். அவர் மேற்கொண்டிருந்த அமைச்சர் பதவியும் அவருடைய வரலாற்றுணர்வும் (Historical Sense) அவரைச் சமுதாய வரலாறு படைக்கும் வரலாற்று ஆசிரியராகவே செய்து விட்டன. பெரியயுரானமும் அந்நாளைய சமுதாய வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுகிறது. பிற்காலத்தில் கற்பனை என்ற பெயரில் எதை எழுதினாலும் உயர்வு நவிற்சி அணி என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டாக, மெய்ம்மைக்கு அப்பாற்பட்டதாக அளவு கடந்து பாடும் மரபு பல்கிவிட்டது. ஆனால் இக் கவிஞர் இம்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவர். வரலாற்றுக் கண்ணுடன், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் அப்படியே கூறத் தொடங்கினால் காப்பியம் சிறவாமற் போய்விடுமோ என்ற அச்சம் எழுவது நியாயமே. ಆಗಿಹ6, சரித்திரம் வேறுபாடு உள்ளதை, நடந்ததை, நடந்தவாறே கூறுபவன் வரலாற் றாசிரியன். ஆனால் கவிஞன் என்ன நடக்கவேண்டும் என்று விரும்புகிறானோ அதனைப் பாடுபவன். எனவே இவர்கள் இருவர் இடையேயும் பொதுத் தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியன்று. அப்படியானால் அடியார்களுடைய வரலாறுகளைக் குறிக்கும் நூலா இது? என்றால் அதுவும் இல்லை என்றுதான் கூறல் வேண்டும். அறுபத்து மூவர் வரலாற்றையே கூறும் என்றாலும் அவர்தம் சரிதம் (Biography) தமிழகச் சமுதாய வரலாறு (Social History) ஆகியவற்றுடன் தமிழ் ртLGB ou ravnini (History of Tamil Country) arar epaira opujib ஒரு குறிப்பிட்ட அளவில் ஒன்று கலந்து யாக்கப் பெற்றதே பெரிய புராணம் எனலாம். - - இலக்கிய அடிப்படையில் சரித்திரத்தை மூன்று பிரிவாகக் காணலாம் சரித்திரம் என்பதை இலக்கிய அடிப்படையில் மூன்று பிரிவு களாகப் பிரிக்கலாம். முதலாவது ஒரு காலத்தையும் அதன் சிறப்பையுங்காட்ட எழுவது. இரண்டாவது ஒரு தனிமனிதனை