பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 56 9 அல்லது சில மனிதர்களைப் பற்றிக் கூறி அவர்கள் முயற்சியால் ஏற்பட்ட பயன்களைக் குறிப்பது. மூன்றாவது நிகழ்ச்சிகட்குச் சிறப்புத் தந்து பேசுவது என்பனவே அப் பிரிவுகள். இவற்றுள் இரண்டாவதாக உள்ள பிரிவை அடிப்படையாகக் கொண்டதே சரிதம் எனப்படும். சரிதம் என்பது தனிமனிதர் களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை, நினைவு, குறிக்கோள் முதலியவற்றைப் பற்றியும் பேசுவதே தவிர சமுதாயம், அதன் வளர்ச்சி என்பனபற்றிப் பேசுவது அதன் நோக்கமன்று. எனினும், இத் தனி மனிதர்கள் தோன்றிய சமுதாயம் எத்தகையது? என்று கூறுவதும் நியாயமானதேயாகும். சரிதம் என்பது இந்தத் தனி மனிதர்களால் சமுதாயம் பெற்ற மாறுதல்களையும் ஒரளவு குறித்துத்தான் செல்கிறது. மகேந்திர பல்லன் கால அரசு ஊழியர் கையூட்டுக்கு மயங்கல் மகேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த மக்கள் மன நிலையை, அரசனாகிய அவன் பாதித்ததைவிட அதிகமாக, ஒரு தனி மனிதர் பாதித்தார். எனவே அவருடைய சரிதங் கூறும் பெரியபுராணம் அம் மக்களை எவ்வாறு அத் தனிமனிதர் மாற்றி னார் என்று கூறும் பொழுது சரிதம், சரித்திரமாக மாறிவிடுகிறது. (Biography of an individual becomes the history of that country, which produced him). GTsürprrgjth Ffrøugeri Lțgfrøð Iš#) லிருந்து மகேந்திரனுடைய காலத் தமிழக வரலாற்றை முற்றிலு மாக அறிய முடியாது எனினும், நாவரசர் வாழ்க்கை மன்னனை யும் மக்களையும் எவ்வளவு பாதித்தது என்பதை அறியலாம். 'நாவரசரை அழைத்து வருக என்று ஆணையிடும் மன்னவன், "தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது என்பால் கொடுவாரும் என்று கூறினதாகக் கவிஞர் பாடுவதிலிருந்து பல்லவர் ஆட்சியில் கையூட்டுப் பெறுபவர் பலர் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இதனைக் கூறுவது கவிஞனுடைய நோக்கமன்று, என்றாலும் போகிற போக்கில் கூறப் பெற்ற இச்செய்தி அற்றை நாள் ஆட்சியிலும் அரச அலுவலரிடையே இத்தகைய பழக்கம் இருந்தது என்பதை நமக்கு அறிவிக்கின்றது. மன்னனே இயற்றிய மத்தவிலாசப்பிரகசனத்திலும் இப்படி ஒரு செய்தி கூறப் பட்டுள்ளது என்பதை முனைவர் இராசமாணிக்கனார் தம் 3.