பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 57 i கவிஞர் காலத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் இப் பெருமகனாருடைய காப்பியத்தில் அற்றை நாளில் தமிழகத்தில் வாழ்ந்த அத்தனை சாதிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர். இவருள் அந்தணர் மரபைச் சேர்ந்தவர்கள் 12 பேர், வணிகர் 6 பேர், வேளாளர் 13 பேர், ஆதிசைவர் 4 பேர், குயவர், வேடர், இடையர், ஏகாலியார், பரதவர், சாலியர், பாணர், பறையர், ஈழவர் (சாணார்) மாமாத்தியர் என்ற 10 வகுப்புகளிலும் ஒவ்வொருவர் உள்ளனர். எறிபத்தர், குலச் சிறை, திருமூலர், தண்டியடிகள், கணம்புல்லர், காரியார் என்பவர்கள் மரபு குறிக்கப்படவில்லை. இவ்வடியார்களுள் சேர நாட்டினர் 2 பேர், சோணாட்டினர் 37 பேர், மலை நாட்டினர் 2 பேர், பாண்டிய நாட்டினர் 5 பேர், நடு நாட்டினர் 7 பேர், தொண்டை நாட்டினர் 3 பேர், வடவர் 2 பேர், வடவர் என்று குறிக்கப்படுபவர் திருமூலரும், நேச நாயனாரும் ஆவர். நேசர் காம்பிலி எனப்பெறும் குந்தள நாட்டினராவர். இத்தனைப் பிரிவு களில் வாழ்ந்த இம்மக்கள் அனைவருடைய பழக்க வழக்கங்கள் முதலியவற்றை மிகவும் நுண்மையாக அவர் அறிந்து வைத்திருந் தார் என்பதையும் அவர் காப்பியத்தில் காணலாம். திரு நாவலூரர் என்ற பெயருடன் ஆதிசைவர் குலத்தில் பிறந்த பிள்ளையை நரசிங்க முனையரையர் என்னும் அப் பகுதியை ஆண்ட சிற்றரசர் தத்து எடுத்துக் கொண்டு வளர்த்தார் என்ற செய்தியைப் பெரிய புராணம் கூறுகிறது. 'விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை பூண்டார்’ 2 குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம் உறவினர்களிடம் குழந்தையைத் தத்து எடுக்கும் பழக்கம் இன்றும் உண்டு. அவ்வாறு எடுத்துவிட்டால் பெற்றோரை விட்டுவிட்டு அக் குழந்தை தத்து எடுத்தவர்களிடம் செல்வதுதான் மரபு. இங்குச் சிவவேதியர் வீட்டுப் பிள்ளை சிற்றரசர் வீட்டில் வளர்கிறது. ஆனால் திருமணம் என்று வந்தவுடன், - &

  • - - - - - - ●等等窃飘 - அந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக்கு ஏற்ப வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன் மகளையே மணம் பேசினர் என்று தெரிகிறது. இந்த நாயன்மார்கள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் வாழ்ந்த பகுதி களில் சாதிப் பிரிவினை வலுவான இடத்தைப் பெற்றிருந்தது