பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்பதை மறுத்தற்கில்லை. ஆனால் சிவவேதியர் வீட்டுப் பிள்ளை குறுநில மன்னன் வீட்டில் வளர்வது சற்று வியப்பையே தருகின்றது. சிற்றரசர்கள் சிவவேதியர் அல்லர். என்றால் வேதியர் வீட்டுப் பிள்ளை வேதியரல்லாத வீட்டில் வளர்வது புதுமையல்லவா? மகன்மை பூண்டார் என்ற சொல்லுக்கு 'மகனைப் போல நேசித்தார்' என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, தத்து எடுத்துக் கொண்டார் என்று கொள்ள வேண்டியதில்லை. தத்து என்று போயிருந்தால் சடங்கவியின் மகளை மணம் பேச வேண்டிய சூழ்நிலை இருந்திராது. எனவே சாதி வேற்றுமை என்பது சமுதாயத்தில் இருந்திருப்பினும் அதனை உடைத்துச் செல்லும் ஆற்றலும் பழக்கமும் உள்ளவர்கள் நிறைந்து இருந்தனர் என்று கொள்ள இடமுள்ளது. இன்றேல் ஆளுடைய பிள்ளை யாழ்ப்பாணரை ஏற்றுக் கொள்வதும், அப்பூதி நாவரசரை ஏற்றுக் கொள்வதும் இயலாத செயலாக இருந்திருக்கும். ஆதி சைவர்கள் பெண் கேட்கும் முறை மகனுக்கு மணம் முடிக்க ஒருவருடைய பெண்ணைப் பேச, பெற்றோர் செல்லாமல் பிற பெரியவர்களை அனுப்பும் வழக்கம் அன்று இருந்தது என்பதைக் கவிஞர், ‘குலமுதல் அறிவின் மிக்கார் கோத்திர முறையும் தேர்ந்தார் நலமிகு முதியோர் சொல்ல...... * 4 என்பதனால் திருமணம் எவ்வாறு பேசப் பெற்றது என்பதையும், 'உற்றதோர் மகிழ்ச்சிஎய்தி மணவினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஒலைவிட்டார்.' 'மங்கலம் பொலியச் செய்த மணவினை ஒலை ஏந்தி அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கலர் சோலை மூதூர் குறுகினார்.... . என்ற அடிகளில் கவிஞர் கூறுகிறார். ஆதி சைவர் திருமணச் சடங்கு முறை மணமகனைக் குளிக்கச் செய்வதும், நீண்ட கேசத்துடன் உள்ளவர்கள் தலையில் ஈரத்தைப் போக்கத் துணியை முன்கையில் ஒருவன் சுற்றிக் கொண்டு கேசத்தின் நடுவே விரல்களைச் செலுத்தி ஈரம் போக்குவதையும் எவ்வளவு தெளிவாகவும் விளக்க மாகவும் இவர் பாடுகிறார் என்பதை நோக்கும் பொழுது மிகச்