பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 57.3 சிறய நுணுக்கமான செய்தியும் (Minor details), இவர் கவனத்தி லிருந்து தப்பவில்லை என்பதை அறியலாம். 'அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணிகொள்பட் டாடை சாத்தி முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன் தூய செங்கை உகிர்நுதி முறையில்போக்கி ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.'" என்ற இப்பாடலில் அரசர்களைக் குளிப்பாட்டவும் அவர்கள் குஞ்சியின் ஈரத்தைப் போக்கவும் தொழில் முறை ஏவலர்கள் (Professionals) இருந்தனர் என்பதைக் கைவலான் என்ற சொல்லால் அறிய முடிகிறது. இதில் சிவவேதியர் குடும்பத்தில் பிறந்து அரச குடும்பத்தில் வளர்ந்தவர் திருமண முறை பேசப் பெற்றது. வைதிக வேதியர் திருமணச் சடங்குகள் இனி வைதிக சமயத்தைச் சேர்ந்தவரும், இருக்கு வேதியுமான திருஞான சம்பந்தர் திருமணம்பற்றிப் பேசும் போது அவருடைய தந்தையாரே, ஏனைய வேதியர்களுடன் மகள் பேசச் சென்றார் என்கிறார் கவிஞர். 'மிக்க திருத் தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக ' 'வருவாரும் பெருஞ் சுற்றம் மகிழ் சிறப்ப மகட் பேசத் தருவார் தண்பனை நல்லூர் சார்கின்றார் தாதையார்' இங்கும் மணவினை குறித்த நாளோலையை மணமகன் வீட்டிலிருந்து பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் மரபு பேசப் படுகிறது. திருமணம் என்று குறிக்கப் பெற்ற நாளுக்கு - - - - - - * 'எழுநாளாம் நன்னாளில் பொன்மணிப் பாலிகை மீது புனிதமுளை பூரித்தார்’ 8 என்று கவிஞர் கூறுவதில் இக் கூட்டத்தாரின் திருமண முறையில் ஒரு பகுதி விளக்கப்படுகிறது. திருமணத்திற்கு சில நாள் முன்னதாகவே மணமகன் வீட்டில் சுற்றத்தார் வந்து கூடி விட்டனர்" என்று கவிஞர் கூறுகிறார். தஞ்சை மாவட்டத்தில் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளின் முன்னர்வரைக்கூட வைதிக அந்தணர் வீடுகளில் திருமணம் என்றால் சுற்றத்தாரும் புடைசூழ வந்து மணமகன் வீட்டில் தங்கும் வழக்கம் இருந்து வந்தது. வைதிகராகிய சிவபாத இருதயர் வீட்டுத் திருமணத்தில் மறைநூலின் விதிப்படி உபகரணங்கள் தயாரிக்கப் பெற்றன