பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்றும் கலசங்கள் வைத்துக் கிரியைகள் தொடங்கினர் என்றும் கவிஞர் கூறுகிறார். '" திருமணத்தின் முதல் நாள் அன்றே காப்புநாண் மணமகளுக்கு அணியப் பெற்றது என்பதையும் அறியமுடிகிறது. ஆதி சைவ ராகிய சுந்தரர் திருமணத்தில் காணப் பெறாத பல சடங்குகள் இவர் திருமணத்தில் நிகழ்ந்தன என்பதைப் பல பாடல்களில் வரிசையாகக் கவிஞர் கூறி வருகின்றார். அவற்றுள் ஒன்றுதான் வைதிக விதிச் ‘சமாவர்த்தக்ை கிரியை என்பதாகும். பிரம்மச்சரிய ஆச்சிரமத்தைவிட்டுக் கிரகஸ்தாஸ்ரமம் புகப்போகும் இளைஞர் செய்யவேண்டிய கிரியையாகும் இது. இதனையும் செய்து முடித்துவிட்டு இருந்தார் பிள்ளையார் என்பதனை, 'பகரும் வைதிகவிதிச் சமாவர்த்தனப் பான்மை திகழமுற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார்' ' என்ற தொடர் வழி அறிகிறோம். இனிக் காப்பணிவதற்கு முன் நிகழ்த்தப் பெற்ற சடங்குகளையும் கவிஞர், 'செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பில் வம்ப னிந்தநீள் மாலைசூழ் மருங்குற அமைத்த அம்பொன் வாசநீர்ப் பொற்குடம் அரசிலை தருப்பை பம்பு நீள் சுடர் மணிவிளக்கு ஒளிர்தரும் பரப்பில் ' என்று பாடுகிறார். ஏறத்தாழ நூறு பாடல்களில் ரிக்வேதிகள் அந்நாளில் செய்த சடங்குகள் அனைத்தையும் விரிவாகப் பாடும் கவிஞர், ஏனைய ரிக்வேத வைதிகர்கள் செய்யாததும், ஆனால் கெளண்டின்ய கோத்திரத்தை சேர்ந்த ரிக் வேதிகள் மட்டுஞ் செய்வதான ஒரு செயலை (அஞ்செழுத்து ஒதல்), மறவாமல், ‘அழகினுக்கு அணியாம் வெண்ணிறு. அஞ்செழுத்து ஒதிச் சாத்தி என்ற அடியில் பாடிச் செல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். திருநீறும் ஐந்தெழுத்தும் இவர்களிடை முக்கியம் பெற்றது. இனி வைதிக முறையில் நம்பாண்டார் (பெண்ணின் தந்தையார்) பிள்ளையார்க்குத் தாரை வார்த்து 'மகளைத் தந்தேன்’ என்று கூறிச் செய்வித்ததையும் கவிஞர் பாடுகிறார். . 'பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் மருவுமங் கலநீர் வாசக் கரகமுன்ஏந்தி வார்ப்பார் தருமுறை கோத்தி ரத்தின் தங்குலம் செப்பி என்றன் அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க்கு . - அளித்தேன்' என்றார்.