பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 575 'நற்றவக் கன்னி யார்கை ஞானசம் பந்தர் செங்கை பற்றுதற்கு உரிய பண்பில் பழுதில் நல் பொழுது நண்ண' இந்த அளவு வைதிக முறையில் நடைபெற்ற திருமணத்தில் சப்தபதி என்ற அக்னியை வலம் வரும் சடங்கும் இன்றியமையாத தாகும். I 4 யாகத்தில் பற்றுள்ளவர் வைதிகர்கள் வைதிகர்கள் அக்னியை அனைத்துக்கும் காரணமாகக் கொண்டு வேத நெறியில் ஒழுகுபவர்கள் ஆவார்கள். ஆனால் முழு முதற்பொருளாகச் சிவபிரானையே ஏற்றுக் கொண்டுள்ள திருஞானசம்பந்தர் அக்னியை வலம் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் அவரும் அதனைச் செய்தார். ஆனால் வைதிகர் கள் அக்னியை எவ்வாறு கருதினார்களோ அவ்வாறு கருதாமல், ‘விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று திருப் பெரு மனத்தை மேவும் சிந்தையில் தெளிந்து சென்றார். 1 : என்ற கருத்தில் அதனைச் செய்யப் புறப்பட்டும், செய்யாமல் அப் பெண்ணையும் அழைத்துத் திருக்கோயிலுக்கு வந்துவிட்டார் .ை முடிக்கிறார் சேக்கிழார். - அந் நாளைய வைதிகர்கள் சமுதாய மரபையும், ஆதிசைவர் கள் சமுதாய மரபையும் நன்கு அறிந்து கூறியுள்ளார் கவிஞர். முற்றுப் பெறாத இத் திருமணத்தை இவ்வளவு விரிவாகக் கவிஞர் பாடக் காரணம் ஒன்றுண்டு. 7ஆம் நூற்றாண்டில் வைதிச சமயத்தார்க்கும் இந் நாட்டில் வாழ்ந்த சிவநெறி அந்தணர் கட்கும் இடையே இருந்த போராட்டம் வெளியே தெரியாமல் நடந்ததாகும். இதுபற்றி முன்னர் விரிவாகப்பேசப் பெற்றுள்ளது. சிவபாத இருதயர் வைதிக நெறியில் அளவு கடந்த பற்றுக் கொண்டவர் என்பதைச் சேக்கிழார் அங்கங்கே குறிப்பாகக் காட்டிக்கொண்டு செல்லத் தவறவில்லை. ஞானப்பால் உண்ட சிறிய பெருந்தகையார், வேதம் எட்ட முடியாமல் ‘நேதி' (இதுவன்று) என்ற, எதிர்மறைச் சொல்லால் குறிக்கும் பரம் பொருளை “இதோ(காண்க)' என்று சுட்டிக் காட்டிப் பதிகமும் பாடினவராவார். இவரைப் பெற்றெடுத்த தந்தையராகிய சிவபாத இருதயர் இந்த அற்புதத்தைக் கண்டும். அடுத்து முத்துப் பந்தர், முத்துச் சிவிகை, பொற்றாளம் என்பவற்றை இறையரு ளால் தம் மகனார் பெற்றதை அறிந்திருந்தும், அவர் தம் கொள்கையிலிருந்து சிறிதும் விலகினதாகத் தெரியவில்லை. பிள்ளையார், -