பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஒல்லைமுறை உபநயனப் பருவம் எய்த உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார் தொல்லைமறைவிதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார்' " என்ற பாடல் மூலம் கூறுகிறார். எந்த நிலையிலும் சிவபாத இருதயர் தமது கிரியைகளை விட்டுக் கொடுக்கவோ யாகங்கள் புரியாமல் இருக்கவோ தயாராக இல்லை. இதைவிட வியப்பான செயல் ஒன்றையும் கவிஞர் பாடிச் செல்கிறார். திருவாவடுதுறையில் இறைவனை வணங்கி அவ்வூரிலேயே அடியார் கூட்டத்துடன் இருந்து வருகிறார் பிள்ளையார். இந் நிலையில் தந்தையாராகிய சிவபாத இருதயர் அங்கே வந்து பார்த்து, 'வேள்வி செய்வதனுக்கு, ஆவதாகிய காலம் வந்து அணைவுற்றது அரும்பொருள் வேண்டும்' என்று கேட்டார் இதனைக் கேட்ட பிள்ளையார், 'அந்தமில் பொருளாவன ஆவடு துறையுள் எந்தையார் அடித்தலங்கள் அன்றோ?' ' என நினைத்து இறைவனிடம் பொருள் வேண்டினார். 'இடரினும் தளரினும் என்று தொடங்கும் ஈரடி மேல் வைப்பு என்ற பதிகத்தைப் பிள்ளையார் பாடினார் என்று மட்டுமே சேக்கிழார் கூறுகிறார். ஆனால் அப்பதிகத்தைப் படிக்கும் பொழுது இறுதி யில் உள்ள ஈரடிகள் நமக்குச் சில ஐயங்களைத் தருகின்றன. 'இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமையாளுமாறு? ஈவது ஒன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே " என்று விளங்கும் முறையில் 10 பாடல்களும் அமைந்துள்ளன. இவர் 'பொருள் வேண்டும்' என்று கேட்டவுடன் இறைவன் தந்திருந்தால், 'இதுவோ எமை ஆளுமாறு?’ என்று பாடவேண்டிய தேவை இல்லை. எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு பாடினார் என்று கொள்வதும் பொருத்தமாக இல்லை. எனவே கேட்டுக் கிடைக்கப் பெறாத பொழுது இவ்வாறு பாடினார் என்று கோடலே நேரிதாகும். ஏன் பொருள் தரப்படவில்லை? என்ற வினாவை எழுப்பினால் திருஞான சம்பந்தர் யாகத்திற்குப் பொன் வேண்டும் என்று கேட்ப்தை இறைவனே ஏற்கவில்லையோ என்ற ஐயமும் தோன்றுகிறது.