பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விடுகின்றார். சீர்காழியில் சிலகாலம் தங்கிய பிள்ளையார் ஊர்கள்தோறும் சென்று இறைவனை வழிபடவேண்டும் என்ற தம் கருத்தைத் தந்தையார்க்குத் தெரிவித்தவுடன் அவர் கூறிய சொற்கள் சிந்திக்க வேண்டியவை. 'பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும் அருமையால் உம்மைப் பயந்த அதனாற் பிரிந்துறை வாற்றேன் இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செயவேண்டும் ஒருமையால் இன்னஞ் சிலநாள் உடன் எய்துவேன் - - z_* 20 எனறுரைததாா என்ற இப்பாடல் சிவபாத இருதயரை நமக்கு உள்ளவாறு எடுத்துக் காட்டும் குறிப்பாகும். கண்டவர்கள் எவரும் பிரிய மனம் இல்லாத பிள்ளையைப் பெற்றும், அவர் செய்துவரும் புரட்சியைக் கண்டும், அவருடன் நிழல்போல் இருக்கவேண்டும் என்று கருதாமல் இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய்யவேண்டும்' என்று கூறும் வைதிகரை என்னென்பது? அந் நாளில் சமுதாயத்தில் நிலவிய சூழ்நிலை இதுதான். கெளண்டின்ய கோத்திரத்தாராகிய சிவபாத இருதயர் சிவபரம்பொருளையே முழுமுதற் பொருளாக ஏற்றுக்கொண்டாலும் அப்பரம் பொருளை வழிபடத் தம் மகனார் காட்டிவரும் அன்பு நெறியை விடத் தாம் பரம்பரையாகச் செய்துவரும் யாக நெறியே சிறந்தது என எண்ணுகிறார். அருமை மகனுடன் இருப்பதைக் காட்டிலும் தாம் கடமை என்று கருதுவதைச் செய்வதே முக்கிய மானது என்று கருதுகிறார். வைதிகர்கள், சம்பந்தர் இருவரிடையே நடைபெற்ற இந்த மறைமுகப் போராட்டத்தில் பெற்ற தந்தையாரை மாற்றாமல் அவர் விருப்பப்படியே நடக்குமாறு விட்டுவிட்டார் சிறிய பெருந்தகையார். திருஞான சம்பந்தர் திருமணச் சடங்கை அவ்வளவு விரிவாகச் சேக்கிழார் பாடுவதற்கும், மகனாரிடம் யாகம் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆழமான காரணம் உண்டு. ரிக்வேதிகள் திருமண முதலிய நிகழ்ச்சிகளில் எவ்வளவு சடங்குகளைப் புகுத்தி உள்ளனர் என்பதை அறிவிப்பது முதலாவது காரணம். அன்றைய வைதிகச் சமுதாயம் எந்த அளவு கார்மிகர்களைக் கொண்டிருந்தது என்பதை இதன்மூலம் காட்டுவது இரண்டாவது காரணம். பிள்ளையார் போன்ற ஒரு குழந்தையைப் பெற்ற சிவபாத இருதியரே இவ்வளவு தூரம் சடங்குகட்கு அடிமையாகி இருந்தார் என்றால் மற்றவர்கள்பற்றிக் கேட்க வேண்டிய தேவை இல்லை.