பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 57 9 ஆனால் இதிலும் ஒரு புதுமையைக் காணமுடிகிறது. பிள்ளையார்.குடும்பம் மேட்டுக் குடிமக்களைச் சேர்ந்ததாகும். ஏனைய அந்தண அடியார்கள் யாரும் பிள்ளையார் குடும்ப அளவு வசதி பெற்றிருந்தனர் என்று கூற முடியாது. எனவே அவர்கள் வீடுகளில் நடைபெற்ற விசேடங்களில் இத்துணை ஆடம்பரமான கிரியைகள் நடைபெற்றனவா என்று அறியவும் வாய்ப்பில்லை. இதனைக் காணுமிடத்து சிவபாத இருதயர் போன்ற வைதிகர்களேகூடப் பிள்ளையாரின் அவதாரத்தால் எவ்விதமான பெரிய மாறுதலையும் அடைந்ததாக நினைக்க முடியவில்லை. பிள்ளையின் தோற்றத்தால் மகிழ்ந்தனர். ஆனால் அவர் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவர்கள் பால் இல்லை. பிள்ளையார் செய்த புரட்சியில் இந்த வைதிகர்கள் ஈடுபட்டதாகவும் நினைக்க முடியவில்லை. இதனால் அந் நாளையச் சமுதாயக் கட்டுக்கோப்பு இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும் என்று நினைய வேண்டியுள்ளது. வேதம் என்று இவர்கள் பேசும் பொழுது ஸம்ஹிதைகளைவிட, பிராம்மணங் கட்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் போலும்! இதிலிருந்து பிள்ளையார் போராட்டத்தின் வலுவை ஓரளவு அறியலாம். சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் பிள்ளையாரிடம் ஈடுபட்டுப் பக்தி வழியில் திரும்பியதுபோல மேட்டுக் குடிமக்கள் பக்தி மார்க்கத்தில் திரும்பினர் என்று நினைக்கவும் முடியவில்லை. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் தலைமையில் தொடங்கப் பெற்ற இந்த சமயப் புரட்சியின் அடிப்படை இதுவே யாகும். பக்தி மார்க்கத்தின் பெருமையையும் பஞ்சாட்சரத்தின் சிறப்பையும் இவர்கள் வலியுறுத்திக் கொண்டே சென்றார்களே தவிர, யாரையும் பார்த்து நீங்கள் இந்த வழியில் வாருங்கள்' என்று அழைக்க வில்லை. தாம் கூறியவற்றாலும், தாம் நிகழ்த்திய அற்புதங்களாலும். மனம் ஈர்க்கப் பெற்று, மக்கள் மனந் திருந்தித் தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கருதினார்களே தவிர யாரையும் வருமாறு அழைக்க வில்லை. நாவரசரைப் பார்த்துப் பல்லவனாகிய மகேந்திரன் மனந் திருந்தினான். பிள்ளையாரைப் பார்த்துப் பாண்டியனாகிய நின்றசீர் நெடுமாறன் திருந்தினான். இதன் பயனாக இவர்கள் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள், மக்கள் ஆகிய அனைவரும் தாமே திருந்தினார்கள். இப் பெருமக்களுடைய சமயவாழ்க்கை எத்துணைத் தூரம் சமுதாயத்தைத் தாக்கியது என்பதை இங்கொன்றும் அங்கொன்று