பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மான வரலாறுகளாலும் நிகழ்ச்சிகளாலுமே அறிய முடிகிறது. சீர்காழி மதுரையிலிருந்து (நானூறு கிலோ மீட்டர்) நெடுந் தொலைவில் இருந்தும் பிள்ளையாரின் அருளிச் செயல்களைப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நன்கு அறிந்திருந் தார். அவரை அழைத்துத் தம் நாட்டையும் மக்களையும் திருத்தி விடலாம் என்ற துணிவில் இருந்தார். பல்லவனையும் பாண்டியனையும்பற்றி, அவர்கள்மூலம் நாட்டு மக்களையும் பற்றி யிருந்த சமண சமயத்தார் நல்ல அரசியல் வாதிகளாகவே இருந் தார்கள் என்று நினையவேண்டியுள்ளது. சமய வாழ்க்கையைவிட அரசியல் வாழ்க்கை அவர்கட்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் நினையவேண்டியுள்ளது. அரசியல் தந்திரங்களில் வல்லவர் களாகவும் இருந்துள்ளனர் என்று அறியலாம். உதாரணமாக ஒன்றைக் காணலாம். மகேந்திரனும் நெடுமாறனும் சமண சமயத்தைத்தான் தழுவி இருந்தனர். பல்லவ நாட்டில் சமணராகவிருந்த நாவரசர் சமயம் மாறிச் சைவராக ஆகிவிட்டார். பாண்டி நாட்டில் மன்னன் மனைவி யாரும், அமைச்சரும் சைவர்களாகவே இருந்தனர். பல்லவனின் துணை கொண்டு திருநாவுக்கரசரைத் துன்புறுத்தியவர்கள், பாண்டியன் துணைகொண்டு அவன் மனைவியையும் அமைச்சரை யும் மாற்ற முயலாதது ஏன்? ஒரு வேளை முயன்று அது இயலாது எனக் கண்டு வாளா இருந்திருக்கலாம்! ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும். இத்தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் சமயத்தைப் பற்றியும் அதன் பக்தர்களைப்பற்றியும் தமிழ் மக்கள் ஒரளவு கவனம் செலுத்தினரேயன்றி அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. மேனாடுகளிலும் மத்திய ஆசியாவிலும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என்ற சமயவாதிகள் தம் சமயத்தைப் பரப்ப எடுத்த முயற்சிகள் போலவோ செய்த போர்கள் போலவோ இத் தமிழகத்தில் என்றுமே நடந்ததில்லை. சமுதாய மக்களுள் பெரும்பாலோர் சமயத்தைப் பின்பற்றி வாழ்ந்திருப்பினும் திருக்கோயில் செல்லுதல், அபிடேக, ஆராதனைகளில் ஈடுபடுதல் என்ற அளவில் நிறுத்திக்கொண்டனரேயன்றி, அதற்குமேல் சென்று யாதொரு முயற்சியையும் செய்ததாகத் தெரியவில்லை. சைவர்களாக இருந்தவர் சமயம் மாறுதல் என்பதும், பிற சமண, பெளத்தர்கள் மறுபடியும் சைவர்களாக ஆவதும், அற்றை நாளில் இருந்து வந்த வழக்கந்தான் எனினும், பிற சமயத்தார் சைவராக மாறுவதற்குச் சைவர்கள் பெருமுயற்சி எதுவும்