பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 36 7 'முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல்போற்றும் ' r இயல்புடையார் இந்நாட்டார். இந்த அடிப்படையில் கண்டால் சங்கப் பாடல்களில் பற்பல புலவர்களும் ஒன்று முதல் பல அடை அடுத்த சொற்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்துவ தன் அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியும். இல்லாவிடின் இவை வாய்மொழி இலக்கியங்களை ஆக்குபவரின் அடைச் சொற்கள் கருவூலம் (Stock phrases) என்று கருதிவிட ஏதுவாகும். சிலப்பதிகாரம் திடீரென்று தோன்றிய காப்பியமன்று அது நன்கு வளர்ச்சி அடைந்த இலக்கியக் காப்பியம் மேலும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்குள் தோன்றிய புறம் முதலியவற்றை வாய்மொழி இலக்கியம் என்று கூறிவிட்டால் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தை எவ்வாறு வகைப் படுத்துவது என்று குழம்ப நேரிடும். வாய் மொழி இலக்கியம் வழங்கிய நாட்டில் அதனை அடுத்து ஒரு நூற்றாண்டில் சிலம்பு போன்ற முழுத் தன்மை பெற்ற இலக்கியக் காப்பியம்(Literary Epic) தோன்றிற்று என்று கூறதல் பொருந்தாக் கூற்றாகும். சங்கப்பாடல்கள் என்று இன்று நம்மால் குறிக்கப்படும் பாடல்கள் தோன்றுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னர்த் தோன்றிய தொல்காப்பியத்தில் நெடும் பாடல்கள், காப்பியங்கள் உரை நடை என்பவற்றிற்கு இலக்கணம் கூறப்பெற்றுள்ளன என்பதைக் காணமுடிகிறது. அவ்வாறானால் இத்தகைய இலக்கியங்கள் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்னர் இந் நாட்டில் உலவியிருக்க வேண்டுமன்றோ? அவை என்ன ஆயின? மறுபடியும் புறம், அகம் போன்ற உதிரிப் பாடல்கள் தோன்றி அவை வளர்ச்சியடைந்து பத்துப்பாட்டுப் போன்ற நெடும் பாடல் களாக வளர்ந்தன என்று கொள்வதும் சரியாகத் தோன்றவில்லை. தொல்காப்பிய காலத்துக்கும், இன்றுள்ள சங்கப் பாடல்கள் என்பவை தோன்றுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் இத் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியால் பழந்தமிழ் இலக்கியங்கள் அழிந்து மறைந்து விட்டனவா? இறையனார் களவியல் உரையி லும், சிலப்பதிகாரத்திலும் கூறப்பெறும் கடல் கோள் நிகழ்ச்சி உண்மையில் நடந்து, இத்தமிழகத்தின் பழம் பெரும் இலக்கியச் செல்வங்களை அழித்தனவா? இறையனார் களவியல் உரையில் 'எழுத்தும் சொல்லும் வல்லாரைத் தலைப்பட்டேம். பொருளதி காரம் வல்லாரைத் தலைப்பட்டிலேம்' என்று கூறுவதில் ஒரளவு உண்மை இருக்குமா? ஏனைய நூல்கள் போலத்