பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 58 I எடுத்ததாகவும் தெரியவில்லை. அதனாலேயே சமணர், பெளத்தர் இங்கு வந்து பிரச்சாரம் செய்தபொழுது மக்கள் எளிதில் தம் சமயத்தைக் கைவிட்டு அப்புதிய சமயத்தில் சேர்ந்து விட்டனர். இதன் எதிராகத் திருஞான சம்பந்தர் போன்றவர் கள் வந்தபொழுது அதே எளிமையுடன் சைவர்களாக மாறி விட்டனர். மூவர் முதலிகள் பற்றி மன்னர்கள் கல்வெட்டுக்களில் ஒன்றும் கூறவில்லை இவர்கள் சமயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை அறிய வேறு ஒன்றும் துணை செய்கிறது. மகேந்திரன் ஒருவன் மட்டுந்தான் விபrவிருத்தியிலிருந்து சைவனாக மாறினதாகக் கல்வெட்டுச் செய்தானே தவிர வேறு எந்த மன்னர்பற்றியும் இவ்விதச் சான்று ஒன்றும் கல்வெட்டுக்களில் இல்லை. இந்த மகேந்திரனுங்கூடத் திருநாவுக்கரசர் பற்றி ஒரு வார்த்தைகூடக் கல்வெட்டில் குறிக்கவில்லை. பின்னர் வந்த சோழர்களுங்கூடத் தம் வெற்றியைப் பாட்டாகப் பாடிக் கல்வெட்டுக்களில் சேர்த்துக் கொண்டனரேயன்றி, மூவர் முதலிகளின் அருளிச் செயல்கள்பற்றி ஒன்றுங் கூறவில்லை. தேவாரப் பதிகம் பாடுவார் பட்டியலை வைரமேகன் முதல் பல அரசர்களும், இராசராசனும் கல்லில் எழுதினர் என்பதும், மக்களில் பலர் மூவர், அறுபத்து மூவரில் சிலர் பெயர்களைத் தாம் வைத்துக் கொண்டனர் என்பதும் உண்மைதான். ஆனால் சமயவாழ்வில் இவர்கள் எவ்வளவு தூரம் அழுந்தி நின்றனர் என்பது வினாக்குறியாகவே நிற்கும். திருக்கோயில்கள் பல வற்றைக் கட்டினது உண்மைதான். ஆனால் அவற்றுக்கு வைத்த பெயர்களைக் கொண்டு பார்த்தால் இக் கோயில்கள் இறைவனுக் காகக் கட்டப் பட்டனவா? அன்றி இவர்கள் வெற்றிச் சிறப்பை யும், செல்வச் சிறப்பையும் எடுத்துக் காட்டவா? என்பதும் சிந்தனைக்குரியதாகும். மன்னர்கள் சமய வாழ்வில் அழுத்தம் இல்லாமல் இருந்தமையாலேயே, அக்காலச் சமுதாய மக்களும் சமய வாழ்வில் அழுத்தம் இல்லாமல் வாழ்ந்தனரோ? என்றும் நினைக்கத் தோன்றுகிறது. மேனாடுகளில் கிறித்தவர்களுக்குள் நடைபெற்ற போர்களிலும், இவர்கட்கும் இஸ்லாமியர்கட்கும் இடையே நடைபெற்ற போர்களிலும், அரசர்கள் தாமும் ஈடுபட்டுப் போர் புரிந்ததை அறிய முடிகிறது. கத்தோலிக்கர்கள் பிராடஸ்டண்டுகளைத் துன்புறுத்தினர், உயிருடன் பலரை எரிக்கவும் செய்தனர் என்பது வரலாற்று உண்மை. இவை அனைத்திலும் மன்னர்கள் யாதாவது ஒரு கட்சியிலிருந்து