பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 பெரியபுராணம்- ஓர் ஆய். போராடினார்கள் என்றும் வரலாறு பேசுகிறது. அந்நாடுகளில் இவ களிடையே சமயப் பொறை என்பது மருந்துக்கும் இல்லை; சம வெறியே நிறைந்திருந்தது. இதன் எதிராகச் சைவர்கள் இங்கு: புகுந்த சைன பெளத்தர்களுடன் வாய்ச் சண்டை மட்டு.ே புரிந்தனர். அன்றியும் இது உண்மையில் சமய வெறியா? அல்லது அரசியல் வெறி சமயப் போர்வையில் வெளிப்பட்டதா? என்பது சிந்தனைக் குரியதாகும். இதன் எதிராகத் தமிழகத்தில் புகுந்த சைன, பெளத் சமயிகளை எதிர்த்து இங்கிருந்த சைவர்கள் ஒரளவு வாய், சண்டை செய்ததாகத் தெரிகிறதே தவிர, போரில் ஈடுபட்டதா எவ்விதச் செய்தியும் இல்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அதில் மன்னர்கள் பங்குபெற்றதாகவும் தெரியவில்லை ஆகவே தான் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மன்னர்கட்கும் மக்கட்கும் சமயத்தில் வலுவான பிடிப்போ, ஈடுபாடோ வெறியோ இருந்ததாகத் தெரியவில்லை என்று கருத முடிகிறது தமிழ்மக்களின் அமைதியான போக்கிற்கு இது ஒர் எடுத்து காட்டாகும். இதனால்தான்போலும், 'பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ' என்ற பாடல் இந்நாட்டில் அன்றே தோன்றிவிட்டது. மாபெரும் அருஞ் செயல்களைச் செய்தவரும், முத சத்யாக்கிரகியும், சமநோக்கில் திளைத்தவரும் ஆகிய திருநாவு கரசர் போன்றோர் வாழ்க்கை எவ்வளவு தூரம் சமுதா மக்களைத் தாக்கியது என்பதை அறியக்கூட அதிக ஆதாரங்க கிடைக்கவில்லை. எல்லாக் கல்வெட்டுக்களும் இன்னு, காணப்படவும் ஆயப்படவும் இல்லை; எனவே இது பற்றி ஒ. முடிவுக்கு வருவது சரியன்று என்று சமாதானம் சொல்லலாம் அதில் ஒரளவு உண்மையும் உளது என்பதை ஏற்றுக் கொண்ட லும் அக் காலச் சமுதாய மக்களிடை இப் பெருமக்கள் எந் அளவு பாதிப்பை உண்டாக்கினர் என்பது ஐயத்திற். இடமாகவே உளது. - இவர்கள் வாழ்வின் தாக்கம் சமுதாயத்தை (ஓரளவு) பாதிக்கத்தான் செய்தது. அப்பூதி வரலாறு உதாரணம் அந்நாளில் போக்குவரவு சாதனங்களும், செய்திப் போக் வரத்தும் மிகவும் குறையாகவே இருந்தன என்பதில் ஐயமில்லை