பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 58.3 எனவே இவர்கள் அருளிச் செயல்களை அது நடைபெற்ற இடத் திலும், அதைச் சுற்றியுள்ள இடத்திலும் இருப்பவர்கள் மட்டும் அறிந்திருக்க முடியுமே தவிரத் தொலை தூரத்தில் உள்ளவர்கள் அறிந்திருத்தல் கடினம் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே யாகும். கடலூரில் (கரை ஏறவிட்ட குப்பம்) நாவரசர் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறியதை அதற்கு நெடுந்தொலை விற்கு (முன்னூறு கிலோ மீட்டர்) அப்பால் உள்ள திங்களூரில் வாழ்ந்த அப்பூதியடிகள் என்பவர் அறிந்து அவரிடம் ஆட்பட்டார் என்றால் அதில் ஆழமான சில உண்மைகள் உள்ளன எனக்கொள்ளலாம். சாதி வேறுபாடுகள் நிறைந்திருந்த அந்த நாளிலும் வேளாளராகிய நாவரசர் பெருமையை அந்தண ராகிய அப்பூதி அறிந்து தம்மையும் தம் குடும்பத்தையும் நாவரச ரிடம் சரணம் அடைவித்தார் என்பது வியப்புக்குரியது ஒன்றா கும். அதிலும் நாவரசரைப் பார்த்துப் பழகிய பிறகு இவ்வாறு செய்திருந்தால்கூட அது அதிசயமில்லை! அவரைக் காணாம லேயே, கேள்வி மாத்திரையில் அந்த அளவு ஈடுபட்டார் என்றால் அது வியத்தகு செய்தியேயாகும். அப்பூதியார் தாம் செய்த அறங்கள் அத்தனையிலும் திருநாவுக்கரசர் பெயரைச் சூட்டியது வியப்பினும் வியப்பாகும். விளக்கெரிக்க சாவா மூவாப் பேராடுகள் நான்கைக் கொடுத்த வர்கூடத் தம் நாட்டையும், கூற்றத்தையும், ஊரையும் விளக்க மாகக் கல்வெட்டில் எழுதித் தம் பெயரையும் தாம் செய்த அறத்தையும் எழுதிவைக்கும் ஒரு சமுதாயத்தில் இத்துணை அறங்கள் செய்த ஒருவர் தம் பெயரை எழுதாமல் முன்பின் பார்த்திராத ஒருவருடைய பெயரை வைத்தார் என்றால் இச் செயல் அன்று மட்டுமல்ல, இன்றுகூட வியப்பைத்தருஞ் செய்தி யாகும். இவர் மனநிலையை அறியாத நாவரசர் இவரைத் தேடிச் சென்று, ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தரில் தும்பேர் எழுதாதே வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்' என்று கேட்டுவிட்டார். இதனைக் கேட்ட அப்பூதியார் துடிதுடித்துப் போனார். 'பொங்குகடல் கல்மிதப்பில் போந்துஏறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யார் உளரோ? மங்கலமாம் திருவேடத் உடனின்று இவ்வகை மொழிந்தீர் எங்கு உறைவிர் நீர் தாம் யா. இம்பம். ' என்று சீறினார் என்கிறார் சேக்கிழார். இவர்கள் தோற்றத்தால் சமுதாயம் முழுவதிலும் உடனேயே பெருமாற்றம் நடைபெற 39