பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 忍4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வில்லை என்பது உண்மையாயினும் ஒரு சிலரை இப் பெருமக்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றியது உண்மை. சமுதாயத்தில் உள்ள சிலர் இவ்வித மாற்றம் பெற்றாலும் மன்னர்கள் இதுபற்றித் தம் கல்வெட்டுக்களில் குறிக்காமல் போனதற்குக் காரணம் யாதாக இருக்கும்? தான் குணபரஈச்சரம் கட்டியதாகக் குறிப்பவன் அதற்குக் காரணமாக இருந்தவரை ஏன் குறிப்பிடவில்லை? அவரைக் குறிப்பிட நேருமாயின் தான் அவருக்குச் செய்த கொடுமைகளையும் நினைவு கூரவேண்டி வரும் என்ற காரணத்தால் ஒரு வேளை குறிக்காமற் போயிருக்க லாம். இன்றேல் தனது வெற்றிச் சிறப்பை இப்பெருமக்கள் புகழ் விழுங்கிவிடும் என்று அஞ்சியும் இருக்கலாம். அது எவ்வாறாயினும் இப்பெருமக்கள் வாழ்க்கை அன்றைய சமுதாயத்தை ஒரளவு பாதித்தது என்பதற்கு எடுத்துக் காட்டாகவே உள்ளது அப்பூதியார் வரலாறு. தனி ஒருவனுடைய செயல்களில் அவனுடைய சுற்றத்தார் பங்கு கொண்டனர் சமுதாயத்தில் வாழும் மக்கள் தம்முள் ஒருவனுக்கு வருகின்ற குறைவு நிறைவுகளில் தாமும் பங்கு கொண்டனர். சுற்றத்தார் என்பவர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் தம்முள் ஒருவனுக்கு வரும் நன்மை தீமைகளில் தமக்கும் பங்கு உண்டு என்றும் கருதினர். இயற்பகையார்தம் மனைவியைப் பனவற்கு ஈந்தார் என்ற செய்தி கேட்டு அனைவரும் திரண்டெழுந்து தங்கள் சமுதாயத்திற்கு வரும் அவமானத்தைத் துடைக்கப் புறப்பட்டனர் என்று காப்பியம் கூறுவதில் இவர்களிடையே உள்ள கட்டுப்பாடு தெரிகிறது. ஆனால், இதே சமுதாயம், உறவினர்கள் என்பவர்கள் ஏனாதி நாதருடன் தாயத்தான் போர் புரியவந்ததைத் தடுக்க வில்லை. உறவினர்களுள் ஒருவன் சம்பாதிப்பதை, அவன் சேர்த்து வைத்துள்ளதைச் சமயம் நேரும்போது அனைவரும் பகிர்ந்து உண்ணத் தயாராகவே இருந்தனர். பங்காளிகள் சொத்தைப் பங்கிட நினைப்பவர் இன்றும் உண்டு. கோட்புலியார் சேகரித்து வைத்துப் போன நெல்லை, அவர் இல்லாத பொழுது எடுத்து உண்பதில் யாரும் மருட்சி கொண்டதாகத் தெரியவில்லை. பெரு நகரங்களில் சூதாடும் மக்கள் இருந்ததும், சிறந்த சூதாட்டக் காரர் முதல் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வந்தவரை வெல்ல வைத்து அடுத்தடுத்து வரும் ஆட்டங்களில் தாமே வெல்வது என்பது அன்றும் பரவலாக இருந்தது என்பதை மூர்க்க நாயனார் புராணத்தில், -