பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 585 முற்துது தாம் தோற்று முதற்பனையம் அவர் கொள்ளப் பிற்துது பலமுறையும் வென்று பெரும் பொருளாக்கிச் சொற்துதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி நற்துதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார்....' " என்று கூறும் பொழுது அற்றை நாள் சமுதாயத்தின் ஒரு பகுதியைப் புரிந்து கொள்ள முடிகின்றது. முதல் இல்லாமல் அல்லது சிறு முதலை வைத்து வேறு எவ்வித முயற்சியும் செய்யாமல் பொருள் சேகரிக்கவேண்டும் என்று கருதுவோர் எக்காலத்தும் உளர். இவர்களை நம்பித்தான் சூதாடு கழகங் களும், பரிசுச் சீட்டுகளும், குதிரைப் பந்தயங்களும் நடைபெறு கின்றன. எனவே இன்றைய சமுதாயம் அன்றைய சமுதாயத்தி லிருந்து அதிகம் மாறிவிடவில்லை. நீதி மன்றங்கள் இருந்த நிலை இந்தச் சமுதாய மக்கள் நியாயத்திற்குப் பெரிதும் கட்டுப் பட்டு வாழ்ந்தனர் என்பதையும் தடுத்தாட்கொண்ட புராணத் தால் அறிய முடிகிறது. நம்பியாரூரரின் திருமணத்தில் கூடியிருந்த வர்கள் ஆதிசைவர்கள். திருமணப் பந்தலில் வந்து வழக்குப் பேசி வம்பு செய்தவர் அங்குள்ள யாரும் முன்பின் பார்த்திாாத கிழவர். அழிவழக்குப் பேசும் அக் கிழவரையும் அவர் வழக்கையும் கேட்டவர்கள் வியந்தார்கள்; சினந்தார்கள்; ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை. தாங்கள் பலர், அவர் ஒருவர், இடம் தங்களுடையது என்ற காரணங்களால் கிழவரை அந்த இடத்தை விட்டே வெருட்டியிருக்கலாம் அவ்வாறு ஏதும் செய்யாமல் திருவெண்ணெய் நல்லூரிலேயே சென்று உன் வழக்கைப் பேசலாம் எனக் கூறுவது அச்சமுதாய மக்களிடம் இருந்த பண்பாட்டை அறிவிக்கின்றது. பிரதிவாதிகளாகிய தம்முடைய ஊரை விட்டுவிட்டு வாதியின் ஊரில் உள்ள நீதிமன்றமே வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறுவதும் பண்புடமைதான். நாகரிகம் மிகுந்ததாகக் கூறுப்படும் இன்றைய நாளிற்கூடத் தம் ஊரில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காது, என்று கூறிப் பிற மாநிலத்திலுள்ள நீதிமன்றங்கட்குத் தம் வழக்கை மாற்றிச் செல்பவர் உண்டு. நம்பி ஆரூரர் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர்கள் எத்தகையவர்கள்? திருவெண்ணெய் நல்லூரில் இருந்த வழக்குமன்றத்தில் இருந்த பஞ்சாயத்தார்கள்,