பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு 'மறையவர் அடிமை ஆதல் இந்த நிலத்தில் இல்லை என் சொன்னாய்: ' என்றுதான் எடுத்த எடுப்பில் கூறினார்கள். வழக்கைக் கேட்ட அவர்களின் முதல் எதிர்த்தாக்கம் இது என்றாலும், 'ஆட்சியில் ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் ' என்று பேசுவது சாதாரணப் பொதுமக்கள் நிலையிலிருந்து மாறி, தங்கள் விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு, நீதிபதி களாக மாறிவிட்ட நிலைமையை அறிவிக்கின்றது. உலகில் எங்குமே இல்லாத ஒரு வழக்கத்தைக் கூறும் கிழவனார் ஆட்சியில் (Custom) இதுபோன்று உள்ளது என்று எடுத்துக் காட்டல் இயலாத ஒன்றாகும். அப்படியானால் காட்ட முடியாத ஒன்றைக் காட்டு என்று கேட்பது, கிழவரை மடக்க என்று நினைத்துவிடக் கூடாது. மரபு என்பது எழுதப் பெற்ற சட்டத்தினும் உயர்ந்த ஒன்று என்பது இன்றும் நீதிமன்றம், ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகும். எனவேதான் அதற்கு முதலிடந் தந்தனர். அது இல்லாத பொழுது ஆவணம் (Record) உண்டேல் காட்டுக என்றனர். இப்பொழுது நீதிபதிகள் வேண்டுவது வழக்குத் தொடுப்பவர் தம் கட்சிக்கு ஆதாரமான எழுத்து மூலமான ஆவணமாகும். கிழவர் அதனைக் காட்டினார். அதிலுள்ள கையெழுத்தை ஒப்புநோக்கி நீதிபதிகள் அந்த ஆவணம் உண்மையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இங்கேயும் ஒரு சிறப்பைக் காணமுடிகிறது. வாதி யாரென்பது நீதிபதிகட்கும் தெரியாது. ஆனால் அவர் காட்டிய ஒலையில் அவ்வூரைச் சேர்ந்தவர் என்று எழுதியுள்ளது இத்துணை வயது முதிர்ந்த கிழவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் யாரேனும் ஒருவராவது அவரைப் பார்த்திருக்க வேண்டுமல்லவா? அப்படி ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை என்றால் அவர் கொணர்ந்த வழக்கில் ஏதேனும் சூது இருக்கும் என்று எளிதாக அவர்கள் முடிவு செய்து வழக்கைத் தள்ளிவிட்டிருந்தால் அதிலும் தவறு காணமுடியாது! நம்பியாரூரர் உள்ளுர்க்காரர்; வந்தவர் எந்த ஊர்க்காரர் என்று யாருக்கும் தெரியாது. உலகம் காணாத ஒரு வழக்கை ஒரே ஒரு ஒலையில் உள்ள, ஒரே ஒரு வாக்கியத்தால் நிலை நாட்ட விரும்பும் கிழவனைப் பொய் ஆவணம் (Forged Document) தயாரிப்பவன் என்று கூறி வெருட்டி இருக்கலாம், அவ்வாறு அந்தப் பஞ்சாயத்துக்காரர்கள் வெருட்டவில்லை என்பதே அந்தச் சமுதாயத்தார் பண்பாட்டில் உயர்ந்தவர்கள்