பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 587 என்பதை விளக்கப் போதிய சான்றாகும். இறுதியாகச் சட்டத்தையே பெரிதென மதித்து i 'நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர்! தோற்றீர்! பான்மையின் ஏவல் செய்தல் கடன்' என்று தீர்ப்பும் வழங்கின மக்கள் உள்ள சமுதாயத்தைச் சேக்கிழார் எடுத்துக் காட்டுகிறார். சாதி வேறுபாடுகளுக்கிடையே கலப்புத் திருமணங்களும் இடம்பெற்றன சாதிவேறுபாடு நன்கு நிலைபெற்றுவிட்ட சமுதாயத்தான் அற்றைநாள் தமிழ்ச் சமுதாயம். அந்தணர் வேறு ஒர் அந்தணர்க்கு அடிமையாதல் பைத்தியக்காரத்தனம் என்று நம்பிக் கூறிய சமுதாயந்தான். ஆனாலும் ஆதி சைவராகிய சுந்தரர் பரவையாரை மணக்கவிரும்பியதை அறிந்து இதே அந்தணர்கள் அட்டியின்றி அத்திருமணத்தை நடத்தி வைக்கின் றனர். சிலப்பதிகார காலத்திலிருந்தே எள்ளி நகையாடப் பெற்ற சமுதாயம் பரத்தையர் சமுதாயம். அத்தகைய குடியில்தான் பரவையார் பிறந்து வளர்கின்றார் என்பதைச் சேக்கிழார் ஒளிவு மறைவின்றி, 'கதிர்மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையார் என்னும்' நாமம் பூண்டு வளர்கின்றார் என்று கவிஞர் கூறுகிறார். முன், $

  • * * - - - - # * - - - - - & - - - **ul அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏறப வந்த தொல்சிறப்பின் '

பெண்பார்த்து நம்பியாரூரர்க்குத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப் பெற்றது. சுந்தரர் திருமணம் இப்பொழுது அதே மாப்பிள்ளை பதியிலார் குலத்துத் தோன்றிய பரவையாரை மணந்து கொள்கிறார். சமுதாயத்தில் எவ்விதச் சலசலப்பும் ஏற்படவில்லை. அன்றைச் சமுதாயம் இவ்விதக் கலப்புத் திருமணங்கட்கும் இடம் கொடுத்தது என்று கூறினால் தவறு இல்லை. இறையருள் பெற்ற சுந்தரர் விரும்பிய தாலும், இறைவன் திருவாரூரில் உள்ள மறையவர்கட்குக்