பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& S பெரியபுராணம்- ஓர் ஆய்வு கனவில் தோன்றி ஆணையிட்டதாலும் இத் திருமணம் சலசலப் பில்லாமல் நடைபெற்றது என்று அமைதி கூறுவது வலுவிழந்த தாகும். மயிலைச் செட்டியார் தம் மகளைப் பிள்ளையாருக்கு மணம் செய்ய முடிவு செய்தது-இவை புறநடைகள் ஆனால் இவ்வாறு நடைபெற்ற திருமணங்கள் புறநடைக ளாக (Exceptions) இருந்தனவே தவிரப் பெருவழக்காய் இருந்தன என்று கூறல் இயலாது. மயிலையில் வாழ்ந்த சிவநேசன் என்ற பெயருடைய வணிகர் அழகெலாந் திரண்ட ஒர் பெண் மகவைப் பெற்று வளர்க்குங்கால் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் சமண சமயத்தை வென்றதைக் கேள்வியுற்று 'சுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துடன் கேட்பக் கற்றமாந்தர் வாழ் காழிதா டுடையவர்க்கு அடியேன் பெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும் முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்...." என்று கவிஞர் கூறுவதைக் கண்டால் இத்தகைய கலப்பு மணங்கள் அந்நாளில் நடைபெற்றமையால்தான் சிவநேசர் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். என்று தெரிகிறது. அவ்வாறு இன்றேல் சிவநேசர் இவ்வாறு நினைத்ததும் பேசியதும் பைத்தியக் காரத்தனமாக முடிந்துவிடும். சுற்றத்தார் அனைவருங் கேட்கும் முறையில் அவர் பேசியதால் அற்றைநாள் சமுதாயம் இதை ஏற்றுக் கொண்டது என்று நினைப்பதில் தவறு இல்லை. வணிகர் மனத்தில் பூரீதனம் இடம்பெற்றது அந்தணர்கள், ஆதி சைவர்கள் திருமணங்களில் கோத்திரம் முதலியவை முக்கிய இடம் பெற்றன எனக் கண்டோம். காரைக்காலம்மையார் புராணத்தில் வணிகர்கள் குடித் திருமண முறைபற்றிக் கவிஞர் குறிப்பிடுகிறார். 'இல் இகவாப் பருவத்தை'ப் புனிதவதியார் அடைந்த பின்னரே மண ஏற்பாடு செய்யப்பெற்றது என்று புலவர் குறிப்பிடுவது இந்தச் சமுதாய வழக்கத்தை அறிவுறுத்தவேயாம். 'முத்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக' ' என வந்த பெரியவர்கள் புனிதவதியின் தந்தையிடம் பேசினார் கள் என்கிறார். இங்கும் மணமகனின் தந்தை சென்றதாகக்