பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 589 கூறப்படவில்லை. பெரிய இடத்துப் பெண்ணாகலானும் ஒரே மகளாக இருந்தமையாலும் மணம் முடிந்தபின் தனிவீடு அமைத்து அதில் இருக்குமாறு செய்தார்கள். வணிகர் குடியில் இதுதான் வழக்கம் என்பதனைச் சிலம்பில் வரும் 'மனையறம் படுத்த காதை யானும் அறியலாம், பெருவாணிகம் செய்பவர் கட்கு இன்றியமையாமல் வேண்டப்படும் வாக்கு நாணயம் இவ் வணிகர்களிடம் இருந்தது என்பதை, 'மானம்மிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெருவணிகர் குடி துவன்றி ஓங்குபதி ' என்ற பாடலால் கவிஞர் குறிக்கிறார். இந்த இடத்தில் ஒரு பாடல் மூலம் சேக்கிழார் வணிக மரபில் உள்ளவர்கள் பொது இயல்பு ஒன்றைக் குறிப்பிடுகின்றார். பெரியோர்கள் நிச்சயித்துச் செய்து வைக்கப்பட்ட மணங்கள்தான் பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் திருமணத்தில் சீர்வரிசைகள் முதலியன தருதல்பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. ஆனால் வணிகர் திருமணங்களில் இது மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றது போலும்! புனிதவதியாரைப் பெற்றதில் மணமகன் பெற்ற மகிழ்ச்சியைவிட அதிகமாக மாமனார் தந்த பூரீதனப் பொருளால் மகிழ்ந்தான் என்ற கருத்தை, 'மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்ததன்பின் நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பின் நிதிபதிதன் குலமகனும் தகைப்பில் பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி மிகப்புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் ' என்று கூறுவதால் இந்த மணமகனின் மனப்பாங்கைத் தெளிய வைத்துவிடுகிறார். எவ்வகையில் பார்த்தாலும் இது பொருத் தாத திருமணம் என்பதை, 'தளிரடி மென் நகை மயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக் களிமகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள் 3魏 என்று கவிஞர் கூறிவிடுகிறார். செல்வர்கள் தம் செல்வப் பெருக்குக் கேற்ற ஒர் இடத்தில் சுற்றத்தார் மகிழத் திருமணம் நடத்தினார்கள். களிமகிழ் சுற்றம் போற்றியது என்று மட்டுங் கூறுவதால் மணமகள் மன்நிலை என்ன என்பதைப்பற்றி யாரும் கவலைப் படவில்லை என்றும் விட்டுவிட்டார். புனிதவதியார் இல் இகவாப் பருவம் அடைந்தபின் திருமணம் நடைபெற்றது. ஆனால் திலகவதியார் பன்னிரண்டாவது வயதிலேயே திருமணம்