பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 0. பெரியபுராணம்- ஓர் ஆய்வு பேசப்பட்டார். இவை எல்லாம் அந்தந்தச் சமுதாய வழக்கம் என்பதை அறிதல் வேண்டும். திலகவதியார் திருமண ஏற்பாடு திலகவதியாருக்குப் பன்னிரண்டாவது வயது நிரம்பியபின் திருமணம் பேசினார்கள் என்று கவிஞர் கூறுவது வேளாளர் மரபினர் வழக்கத்தை அறிவுறுத்துகின்றது. கலிப்பகையார் என்பவருக்கு மணம் பேசினார்கள். வணிகர் குல வழக்கத்துக்கு எதிராக இங்கே முக்கியமாக எதனைப் பேசினார்கள் என்பதை யும் கவிஞர் குறிப்பிடுகின்றார். 'அணங்கனைய திலகவதியார் தம்மை ஆங்கவற்கு மனம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம்பேசிக் கோதில் சீர்ப்புகழனார் பனங்கொள்அர வகல்அல்குல் பைந்தொடியை மனம் நேர்ந்தார். ' என்பதால் மணமக்கள் பண்பு நலன்களும் அடுத்து அவர்கள் குடி பற்றியும் பேச்சு நடந்ததாக மட்டும் கவிஞர் குறிப்பிடுகிறார். o அளவுதான் நடைபெற்றதே தவிர மணம் நடைபெற எவ்வித முயற்சியும் எடுப்பதற்கு முன் கலிப்பகையார் போர் மேற் சென்று வீரமரணம் எய்திவிட்டார். இவர் போர்க்களத் தில் இறப்பதற்கு முன்னரே திலகவதியாரின் தந்தையார் இறந்தார். அதனைப் பொறாத அவர் தாயாரும் உடன் இறந்துபோனார். எனவே அடுக்கிய துன்பங்கள் வந்தகாலைப் பன்னிரண்டு வயதே நிரம்பிய இத்தமிழ்ப் பெண்மணியார். 'எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக் கொடுக்க இசைந்தார்கள் அத்தமுறையால் அவர்க்கே உரியதுதான் ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத்துணிய '" மருணிக்கியாராகிய தம்பியார் வேண்டிக் கொண்டதால் உயிர் தாங்கி நின்றார் என்கிறது காப்பியம். வேளாளர் சமுதாயத் தில் திருமணம் நடந்து விட்ட பிறகு கணவன் இறந்துவிட்டால் இவர் செய்தது போல் செய்பவர் உளர். ஆன்ால் திருமண ஏற்பாடுகூட நடைபெறாதபொழுது தந்தை தாயார் சம்மதித்து விட்டமையாலேயே, 'யான் அவருக்கு உரியது. என்ற முடிவுக்கு வரும் இவ்விர மகள் அற்றைநாள் சமுதாயத்தின் மரபுக்கு ஓர் புறநடையாவார். நீங்களும் என்னைவிட்டு நீங்கினால் நானும்