பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6.8 பெரியபுராம் - ஓர் ஆய்வு தொல்காப்பியமும் ஒரளவு மறைந்திருக்க வேண்டும். இலக்கணம் அல்லாத பிற இலக்கியங்களை மனனம் செய்து வைத்திருப்பவர் யாரும் இரார். ஆனால் இலக்கண நூலாகலின் தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து வைத்திருப்பவர் பலரும் இருந்திருத்தல்வேண்டும். அத்தகையவர்களைத் தேடிப் பிடிக்கவே பாண்டிய மன்னன் ஆணையிட்டிருக்க வேண்டும் போலும்! + தொல்காப்பியம் கூறும் அம்மை, அழகு முதலியன இன்னும் புரிந்துகொள்ளப் படவில்லை மேலே கூறப்பெற்ற இக்கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியன. பழமையை அப்படியே ஏற்றுக் கொண்டு பழகி விட்டோம். இக் கருத்துக்களில் ஏதேனும் உண்மை இருக்கு மானால் பழைய இலக்கிய வரலாற்றைப் புதிய கண்ணோட்டத் துடன்காணவேண்டி நேரிடும். தொல்காப்பியச் செய்யுளியலின் இறுதியிலுள்ள அம்மை (235), அழகு (236), தொன்மை (237), தோல் (238), விருந்து (239) என்பவை பற்றிய நூற்பாக்கள் இன்னும் சரியாக உரை காணப்படாத பகுதிகளாம். உரை யாசிரியர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் என்ற மூவருள்ளும் இந் நூற்பாக்கட்குப் பொருள் காண்பதில் நிரம்ப வேறுபாட்டிருத் தலைக் காணமுடியும். அம்மை பற்றிக் கூறிய வனப்பியல் தானே (235) என்ற நூற்பாவிற்குப் பொருள் கூறவந்த பேராசிரியர் 'வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும். அதனால் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலையாலே வனப்பென்னும் பெயர்ப் பகுதி வகையான் ஏற்பதென்பது." என்று கூறிச் செல்கிறார். பேராசிரியர் உரையைப் பதிப்பித்த யாழ்ப்பாணம் கணேசையர் இப்பகுதிக்கு உடுக் குறியிட்டு அடிக்குறிப்பாகத் தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் தொல்காப்பியர் கூறிற்றிலராதலின் இது பொருந்துமா என்பது ஆராயத்தக்கது' என்று குறித்துள்ளார், இனி, அழகுபற்றிக் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள் மொழியால் சீர் புனைந்து யாப்பின் என்று கூறுவதால் வழக்குச் சொல், செய்யுட் சொல் என்று அக் காலத்தில் பிரிவினை இருந்திருக்கும் என நினைய வேண்டியுள்ளது.

  • இனிவரும் பகுதிகளில் அடைப்புக்குறியுள் தரப்பெற்றுள்ள எண்கள் குறிக்கப்பெற்ற நூலின் பாடல் எண்களைக் குறிக்கும்.