பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 59 | உயிர்வாழ மாட்டேன்' என்று கூறினாராக, அதற்காகவே உயிர் தரித்தார் திலகவதியார். அதனைக் கூறுவந்த கவிஞர், 'தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணையவுறு நிலை விலக்க உயிர் தாங்கி அப்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பா மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார். ' என்று கூறுகையில் இவ்வம்மையாரின் தியாகம், அன்பு, கருணை என்பவற்றை அறிய முடிகிறது. தன் சகோதரி மனவளம் இல்லாதிருந்தமையின் அவளை யாரும் வைத்துக் காப்பாற்றமாட்டார்கள் என்ற காரணத்திற் காகத் தான் காதலித்த பெண்ணை மணந்து கொள்ளாமல் வாழ் நாள் முழுவதையும் வறிதே கழித்த ஆங்கில இலக்கிய மேதை சார்லஸ் லாம்ப் (Charles Lamb) எல்லா நாட்டிலும் இத்தகைய வர்கள் உளர் என்பதை நிறுவ உதவுகின்றார். இத்தகயை பெரிய தியாகத்தைப் புரிந்த திலவதியார் சிறிது காலங்கழிந்தவுடன் எந்தத் தம்பியாருக்காக உயிர் தாங்கினாரோ அந்தத் தம்பியார் வேற்றுச் சமயத்தை நாடிச் சென்றுவிட்ட நிலையையும் அனுபவிக்க வேண்டிவந்தது. அற்றைநாள் சமுதாயத்தில் வீரமும் நெஞ்சுரமும் உடைய பெண்மணிகள் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாய்த் திலகதியார் விளங்கினார். தம்பியார் சென்று விட்டமைக்காக ஊரைக் கூட்டிக் கூப்பாடு போடவோ அல்லது தம்பியாரிடம் சண்டை இடவோ செய்யவில்லை. தம் துயரத்தை உள்ளே வைத்து மூடிக்கொண்டு தாம் செய்து வந்த தொண்டிலேயே உறைப்பாக நின்றுவிட்டார். தம்பியார் மனம் மாறி மீளவேண்டும் என்றதம் விருப்பத்தை இறைவனிடம்கூறிமுறை யிட்டாரே தவிரப் பிறர் மேல், ஏன் அத் தம்பியின் மேல்கூட எவ்விதக் காழ்ப்போ வெறுப்போ பகையோ கொள்ளவில்லை. இதற்கு அடுத்த நிலையில் தம்பியார், சூலை நோயால் தாக்கப் பெற்று உடனிருந்த சமணர்களால் கைவிடப்பெற்று, எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில், தமக்கையாரை நினைந்து ஆள் மூலம் செய்தி அனுப்புகிறார். எந்தத் தம்பிக்காக உயிர் வாழ்கின்றாரோ அந்தத் தம்பியார் உயிருக்காக மன்றாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் திலகவதியாரது அமைதியான பதில் வியப்பைத் தருகின்றது. .