பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 9 2 பெரியபுராணம்- ஒர் ஆய்வு 'என்று அவன் முன் கூறுதலும் யான் அங்குஉன் உடன் போந்து நன்றறியா அமண்பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய ' என்பதால் பாசம் காரணமாக முறையில்லாத செயலைச் செய்ய அவர் தயாராக இல்லை என்பதையும் அறிவுறுத்துகிறார். பண்பில் மேம்பட்ட இவர்கள் தம் துன்பத்தை, மன ஏக்கத்தை இறைவனிடம் முறையிட்டனரே தவிர வெளிக்காட்டிக் கொள்ளும் பழக்கம் அற்றைநாள் சமுதாயத்தில் இல்லை. இத்தகைய எல்லையற்ற பொறுமையும், சகிப்புத் தன்மையும், காழ்ப் புணர்ச்சி இன்மையும், திருநாவுக்கரசர் வாழ்க்கையில் வெளிப் படுவதையும் பின்னர்க் காணலாம். இத்தகைய அரிய பண்புகள் அவரிடம் திடீரென்று வெளிப்பட்ட பண்புகள் என்று கருதி யாரும் வியக்க வேண்டிய தேவை இல்லை. இப் பண்புகள் அவர் கள் பாம்பரையில் ஊறிவருகின்ற சொத்து என்பதை மனங் கொள்ள வேண்டும். தமக்குப் பெருந் தீங்கு செய்தவர்களைக் கூடத் தவறான, வெறுப்பை அல்லது சினத்தைக் காட்டும் ஒரு சொல் கூறி ஏசாமல் அமைதியுடன் நாவரசர் இருக்கப் போகிறார். அவராவது ஊர்கள் சுற்றி மக்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர். ஆனால் திலகவதியார் பெண்மணியார். வாழ்க்கை யில் ஒரு பெண் பெறக்கூடிய அனைத்தையும் ஒரே நாளில் இழந்து நிற்பவர். இழந்த இத்தனைக்கும் ஈடுகட்டும் முறையில் தம் தம்பியார் ஒருவரிடமே தம் அன்பு முழுவதையும் செலுத்துகிறார் என்றால், இப்பொழுது இவருடைய வாழ்க்கை நடைபெற மூல காரணமாகவும் ஆணி வேராகவும் உள்ள தம்பியார் சமணர் களால் பிரிக்கப்பட்டு விட்டார். இந்த நிலையில் அந்த அம்மை யாருக்கு சமணர் மேல் தீராத பகையும் வெறுப்பும் தோன்று மானால் யாரும் அதனைக் குறை கூறல் முடியாது. அவ்வாறு இல்லாமல் இந்த அம்மையார் 'நன்று அறியா அமண்பாழி நண்ணுகிலேன்' என்று கூறுகிறார். தம் வாழ்வைச் சூறையாடினவர்களை 'நன்று அறியாதவர்கள்' என்று கூறும் சமதிருஷ்டியைத் தமக்கையார் இப்பொழுதும், தம்பியார் சில காலங் கழித்தும் வெளிப்படுத்துகின்றனர். திலகவதியார் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்பியைப் பறிகொடுத்த துயரத்தை இறைவனிடம் முறையிட்டுவிட்டு எவ்வாறு துணிவுடன் வாழ்க்கை நடத்தினாரோ அதேபோல மேட்டுக் குடியில்பிறந்தவர்ான மங்கையர்க்கரசியார் அமண் சமயத்தில் ஒழுகிய கணவனுடன் வாழ்க்கை நடத்தினார். இந்