பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 5 9 3 நிலையில் இத் தமிழ்ச் சமுதாயத்தில் சமண சமயம் குறுகின்ற இரண்டு மன்னர்களைப்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவன் பல்லவனாகிய மகேந்திரவர்மன், இரண்டாமவன் பாண்டியனாகிய நின்றசீர் நெடுமாறன். இருவரும் தொடக்கத்தில் சமணராக இருந்து முறையே நாவரசராலும், சம்பந்தராலும் சைவராக ஆனவர்கள். என்றாலும் பல்லவனாகிய மகேந்திரன் நாவரசரைத் துன்புறுத்தினான். ஆனால் பாண்டியன் தன் மனைவியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவராக இருந்ததைப் பொருட்படுத்த வில்லை; அவர்கட்கு எவ்விதத் தொல்லையும் தரவில்லை. தான் தமிழனல்லாத காரணத்தால் பல்லவன் நாவர சருக்குத் தீங்கிழைத்தானோ? என்று கூட நினைக்கத் தோன்று கிறது. மகேந்திரன் நெடுமாறன் ஆகிய இருவரும் தொடக்கத்தில் சமணரேயாயினும் மாற்றுச் சமயத்தாரைச் சகித்துக் கொள்ளும் மனநிலை பல்லவனிடம் இல்லை. காரணம் அவன் வேற்று நாட்டிலிருந்து வந்தவனாகலின் மாற்றுச் சமயத்தாரால் தன்னாட்சிக்கு இடையூறு எற்படும் என அஞ்சிவிட்டான். இந்த அச்சத்திற்குத் துபம் போட்டே அவன் காலச் சமணர்கள் நாவரசரைத் துன்புறுத்துமாறு செய்தனர். இந்தச் சமணரும் வெளிநாட்டவரே தவிரத் தமிழகத்துச் சமணர்கள் அல்லர். சாதி வேறுபாடுகள், நிறைந்த அற்றைநாள் சமுதாயத்தை நன்கு அறிந்திருந்த சேக்கிழார் அவ்வச் சாதியைப்பற்றிப் பேசும் பொழுதும் அவர்கள் தொழில்களைப் பேசும்போதும் எவ்வளவு கவனத்துடனும் நுணுக்கத்துடனும் பேசுகிறார் என்பதையும் அறிய முடிகிறது. - அந்தணர்களுள், ஆதிசைவர், வைதிகர்கள் என்ற இரண்டு பிரிவினர் உண்டு. ஆதி சைவர்கள் சிவபெருமானைப் பரம்பொருள் எனக்கொண்டு கோயிற் பூசையில் ஈடுபட்டவர். இவர்கள் தென்னாட்டிலேயே தோன்றி வளர்ந்தவர்களாவர். சுந்தரமூர்த்தி நாயனார் அவருடைய பெற்றோர்கள் தவிரப் புகழ்த்துணை நாயனார் என்பவரும் இவ் வகுப்பை சேர்ந்தவர். புகழ்த்துணை உணவில்லாமல் முற்றிலும் உடல் தளர்ந்த நிலை யிலும் கோயிற் பூசையை விடாது செய்தவர். சிவாகம முறைப்படி வழிபாடாற்றியவர். இம்மரபினர் வேதங்களை அறிந்திருப்பினும் சிவாகமங்கட்கே முதலிடம் தருபவர். வைதிகர்கள் எனப்படுவோர் ஆகமங்களை முற்றிலும் ஒதுக்கியவர்களாவர். இவர்கள் தவிர 12 பேர் வைதிக மறையவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேதத்தை ஒப்புக்