பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 5 95 உருத்திரம் அருமறைப் பயன் என்று கூறுவது தமிழ்நாட்டு மறையவர் கொள்கை மறையவராகிய முருக நாயனார்பற்றிக் கூறும் பகுதியில், மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர் ஞான வரம்பின் தலைநின்றார் நாகம் புனைவார் சேவடிக்கீழ் ஊனம் இன்றி நிலை அன்பால் உருகு மனத்தார் முருகனார்' என்றுங் கூறுகிறார். 每直 உருத்திர பசுபதியார் குலத்தைக் கூறுகையில், 'அங்கண் மாநக ரதனிடை அருமறை வாய்மைத் துங்க வேதியர் குலம் " என்று கூறிவிட்டு மேலும், 'பொன்மலை வல்லி பங்கனார் அடிமைத் திறம்புரி . பசுபதியார்' என்றும் பேசுகிறார். இவர் உருத்திர மந்திரத்தைக் கழுத்தளவு தண்ணிரில் நின்று சபித்தார் என்று கூறுகையில், 4 3 ‘அருமறைப் பயனாகிய உருத்திரம்" என்றும் கூறுதல் கவனிக்கத் தக்கது. வைதிகரும் ஆகம 器 செய்ததைத் திருநீலநக்கர் வரலாற்றில் காண்கிறோம் தலைசிறந்த முதல் வேதம் எனப்படும் இருக்கு வேதத்தில் இல்லாமல், கிருஷ்ண யஜுர் வேதத்தில், தைத்ரிய ஸம்ஹிதையில் நாலாவது காண்டத்தில், ஐந்தாவது பிரபாடகம் ஆக வரும் உருத்திரம் அருமறைப்பயன்ர்கிய உருத்திரம்' என்று பேச்ப் படுகிறது. வேதங்கள் நான்கினும் தலையாயது இருக்கு. ஆனால் அதில் இடம் பெறாத உருத்திரதத்தை "அருமறைப் பயனாகிய என்பதால் சிவவழிபாட்டை முக்கியமாகக் கொண்ட இந்நாட்டு வேதியர் கருத்து இது என்று கொள்ளல் நேரிதாம். சண்டேசர் தோன்றிய சேய்ஞ்ஞலூரையும் அதில் வாழ்ந்த வேதியர்களையும் குறிக்கும் பொழுது,