பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 9 6 பெரியபுராணம்-ஒர் ஆய்வு 'செம்பை வெண்ணிற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்குவேதம் முறை பயின்றார் தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழுலகும் போற்றும் மறையோர் விளங்குவது “ என்ற முறையில் பாடுகிறார். இதுவரை வைதிக வேதியர்கள் பற்றிய விளக்கங்களைத் தந்த கவிஞர், திருநீலநக்கர்பற்றிப் பாடுகையில் குழப்பம் உண்டாகிறது. 'ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக்காப்பில் ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இருபுறப்பாளர்' " என்று கூறிவிட்டு, அத்தகைய குடியில் பிறந்தவர் நீலநக்கர் என்றும் விளக்கிவிட்டு, அவரைப் பற்றிக் கூறத் தொடங்கி, "மெய்த்த ஆகம விதிவழி வேதகா ரனரை நித்தல் பூசனை புரிந்தெழு நியமும் செய்தே' 'ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில் மேயபூசனை நியதியை விதியினால் முடித்துத் தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார். ' என்று கூறி அயவந்தி என்ற பெயருடன் விளங்கும் திருக்கோயில் சென்று இறைவனைப் பூசை செய்ய விரும்பினார் என்று கூறுகிறார். அவர் பூசை முறையை, 'முறைமையால் வருபூசைக்கு முற்ற வேண்டுவன குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடுங்கூட இறைவர் கோயில் வந்து எய்தினர்......... 4. 'துணை மலர்க்கழல் தொழுதுபூசனை செயத் தொடங்கி இணைய நின்றங்கு வேண்டுவ மனைவியார் ஏந்த உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்’ "நீடுயூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்' " என்று விளக்குவது வியப்பைத் தருகிறது. இவர் ஆதி சைவரல்லர்: வைதிக அந்தணர் என்பதையும் கூறிய ஆசிரியர் திடீரென்று 'ஆகம விதிவழி தினம் கோயில் பூசை செய்தார் என்று கூறுவது