பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 59 7 புதுமையாகும் வைதிக அந்தணர்பற்றிக் கூறப்பெற்ற எந்த வரலாற்றிலும் ஆகம விதியைப் பின்பற்றித் திருக்கோயிலில் பூசை செய்தார் என்று கூறவே இல்லை. திருஞானசம்பந்தர் புராணத்திற்கூட இது இடம்பெறவில்லை. பூரீருத்ரம் சொல்லும் உருத்திரபசுபதியாரைக் கூடக் கோயில் பூசை செய்தார் என்று கூறாத சேக்கிழார் இந்த வரலாற்றில் மட்டும் வைதிகராகிய நீலநக்கர், வீட்டில் முத்தீவளர்ப்பவராகிய இவர், ஆகமவிதிப்படிக் கோயில் பூசை செய்தார் என்று கூறுவது எப்படி என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை? திரு நீலநக்கர், ஞானசம்பந்தர் சமகாலத்தவர். அவரைத் தம் வீட்டில் வரவழைத்து உபசரித்தவர். என்றால் திருஞானசம்பந்தர் காலத்தில் ஆகமம் இருந்து அதன் வழிப் பூசனை செய்யப் பெற்றது என்பதை ஏற்றுக் கொள்வது நேரிதாகும். திருஞான சம்பந்தரும் ஆகமம் பற்றிக் கூறுகிறார். ஆகலின் அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் சிவவேதியர் அல்லாத வைதிக வேதியர், எவ்வாறு கோயிற் பூசையில் ஈடுபட்டார் என்ற வினாவிற்கு விடை காண்பது அரிது. ஆகமம்பற்றித் தேவாரம் ஒரளவு பேசுகிறது. 'தொகுத்தவன், அருமறை அங்கம், ஆகமம் வகுத்தவன், வளர்பொழில் கூகம் மேவினான் ‘’ 'திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே அறம் கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமரும் இடம் " என்ற குறிப்புக்கள் பிள்ளையார் அருளிச் செய்தவையாகும். 'ஆகமம் சொல்லும் தன்பாங்கிக்கே ' 'அண்டர் தமக்கு ஆகமதுல் மொழியும் ஒதியை 'அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே’’ 'அரவொலி ஆகமங்கள்....தோத்திரங்கள் ' 2 பின்னர்க் காட்டப் பெற்ற நான்கு குறிப்புக்களுள் ஒன்று மட்டும் அப்பருடைய வாக்கு. ஏனைய மூன்றும் சுந்தரர் வாக்காகும். அப்பரும், பிள்ளையாரும் போகிற போக்கில் உமைக்கு ஆகமஞ் சொன்னார், ஆகமம் வகுத்தார் என்று மட்டுமே கூறிப்போகின்றார் கள். இவர் இருவருக்கும் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வரும் சுந்தரர், ஆதி சைவர் ஆகலின் மூன்று இடங்களில் ஆகமம்பற்றிப் பேசுகிறார். எனவே ஏனைய வைதிகர்கள் ஏற்றுக் கொள்ளாத