பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 9 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஆகமத்தைப் பிள்ளையாரின் சமகாலத்தவராகிய நீலநக்கர்மேல் ஏன் ஏற்றிக் கூற வேண்டும்? அந்த வைதிகர் ஆகமத்தை ஏற்றுக் கொண்டாரா? எந்த அடிப்படையில் கவிஞர் இவ்வாறு கூறுகிறார்? இது ஒருமைப்பாட்டின் விளைவு இவரைப்பற்றிக் கூறியுள்ளவற்றைத் தொகுத்துக் கண்டால் இவர் வைதிகர், முத்தி வளர்க்கும் வேதவழிப்பட்ட வைதிகர் என்றே நினைய வேண்டியுள்ளது. அப்படியானால் இவர் கோயில் பூசையில் எவ்வாறு ஈடுபட்டார்? ஒருவேளை பல்லவர்கள் இறக்குமதி செய்து இந்நாட்டில் கோயிற் பூசையில் புகுத்தப் பட்டவர்களுள் ஒருவராக இவர் இருக்கலாமோ? என்று நினைப் பதற்கும் இடம் கொடாமல் ஆகம வழிப்பட்ட பூசை செய்தார் என்றுங் கூறுவது இன்னும் வியப்பை உண்டாக்குகிறது! இவ் வைதிகர்கள் ஆகமத்தை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கும், ஆதி சைவர்கட்கு அவையே உயிர்நாடி என்பதற்கும் சான்று வேண்டுமானால் இருக்குவேத மரபினராகத் திருஞான சம்பந்தரையும், ஆதிசைவமரபினராகச் சுந்தரரையும் காட்ட லாம். சம்பந்தர் ஆகமம் பற்றிக் கூறுவது இந்த இரண்டு பெரும் பிரிவினர் இடையேயும் ஒர் ஒருமைப்பாட்டை உண்டாக்கவே யாகும். எனக் கோடல் நேரிதாம். இவ்வொருமைப்பாட்டின் விளைவும், பயனும் இது ஒருபுறம் இருக்க, நீலநக்கர் அயவந்திப் பெருமானை முறைப்படி வழிபடத் தொடங்கும்பொழுது பக்கத்திலேயே உடன். நின்றுகொண்டு உதவி புரிந்தவர் அவருடைய மனைவியாராவார். திருமேனிமேல் சிலந்தி விழுந்தவுடன் அதனை ஊதிப் போக்கும். அளவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் என்று சேக்கிழார் பாடுகிறார். ஒரு பெண்மணி கருவறையில் நின்று பூசைக்கு உதவுவது என்பதை எந்த ஆகமமும் அனுமதிப்பதாகத் தெரியவில்லை. ஆசார்ய அபிடேகம் செய்யப்பெற்ற சிவவேதியர் தவிர ஏனைய வைதிகர், சிவவேதியர் குடிப்பிறந்த பெண்கள் உள்பட எவரும் அர்த்தமண்டபத்திற்கு உள்ளே செல்லுதல் இயலாது. அப்படியானால் ஆகம விதியில் வழிபாடு செய்யும் நீலநக்கர் எவ்வாறு இதனை அனுமதித்தார்? திருநீலநக்கர் தமிழக வேதியராகலின் வேதம், ஆகமம் ாண்டையும் ஏற்றுக்கொண்டார் என்று கொள்ளலாம். இன்றேல் வந்த வேதியர்களுள் சிலராவது வேதங்களுடன்