பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 59 9 ஆகமங்களையும் ஏற்றுக் கொண்டனர் எனக் கொள்ளலாம். எவ்வாறாயினும் நீலநக்கர் சிவவேதியரல்லர். எனவே இவர் அயவந்திக் கோயிலினுள் சென்று ஆகமம் மறுக்கும் உரிமையை, மனைவிக்குத் தந்துவழிபட்டார் என்றால் இருவரும் ஒரு புரட்சி வாதி என்றே கொள்ளவேண்டியுள்ளது. இந்த ஆகமங்கள் நாளா வட்டத்தில் புதிய கொள்கைகளைச் சேர்த்துக் கொண்டு வளர்ச்சியடைந்தன என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது ஏழாம் நூற்றாண்டு ஒரு குழப்பமான காலமாக இருந்திருக்கும் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவந்த அந்தணர்கள், முன்னரே குறிக்கப் பெற்ற முறையில் வேதங் கற்றவராயினும் ஆகமங்களையும் ஏற்றுக்கொண்டு சிவனையே பரம்பொருள் என்று ஏற்றுக் கொண்டு ஐந்தெழுத்தையே மாபெரும் மந்திரமாகப் போற்றி வாழ்ந்தவர் கள் என்று நினைக்கலாம். பல்லவர்களால், தண்டன் தோட்டச் செப்பேட்டில் கண்டுள்ளபடி, வரவழைக்கப்பெற்ற வேதியர்கள் சிவனை முழுமுதற்பொருளாக ஏற்காமல், பஞ்சாட்சரத்தையும் தாரகமந்திரமாகக் கொள்ளாமல் வேதத்தையே போற்றி, பிராமணங்கள் என்பவற்றில் கூறப் பெற்றுள்ள யாகமுறையைப் பின்பற்றியவர்கள் என்றும் கோடல் நேரிதாகும். எனவே இவர் களுக்கிடையே ஆரவாரமில்லாத ஒருவகையான போராட்டம் நடந்திருக்கும் என்று கோடலும் நேரிதாகும். இதனை ஓரளவு நன்கறிந்திருந்த சேக்கிழார் இந்தப் போராட்டத்தை அதிகம் வெளிப்படுத்தாமல் இந்த உள்நாட்டு வேதியர் வழிபாட்டு முறையை மட்டுமே பெரிது படுத்திக் காட்டிச் செல்கிறார். இதனை வலுப்படுத்தும் முறையில் சண்டேசர் புராணத்திலும் வைதிகராகிய சண்டேசர் சேய்ஞ்ஞலூரில் சிவபூசை செய்வதைப் பற்றிப் பாடுகிறார். 'கோதில் மான்தோல் புரிமுந்நூல் குலவுமார்பிற் குழைக்குடுமி ஒது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்குந்தாரகையும் மதியும் போலப்புணர் மடங்கள் என்று கூறிவிட்டு, 'யாகம் பலவும் சாலை தொறும், மறையோர் ஈந்த அவியுணவின் பாகம் நுகர வருமாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்