பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 G 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மாகம் இகந்து வந்திருக்கும் சேக்கை எனவும் வானவர்கோன் நாகம் அணையும் கந்தெனவும் நாட்டும் யூபஈட்டமுள ' என்று அவ்வூரில் நடைபெற்ற யாகங்களின் சிறப்பை இவ்வளவு விரிவாகப் பேசுகிறார். இங்கு மறையவர் செய்த வேள்வியில் மாலும், அயனும், இந்திரனும், அவியுணவைப் பெற வருகின்றனர் என்று பாடும் இதே கவிஞர் திருஞானசம்பந்தர் புராணத்தில் வேள்வி நடைபெற்றதைக் குறிக்கும் பொழுது வேறுவகையாகக் குறிக்கின்றார். சண்டேசர் புராணத்தில் இதனை மேலுந்தொடர்ந்து, தாழ்வில் தரளம் சொரிகுலைப்பால் சமைந்த யாகத் தடஞ்சாலை சூழ்வைப்பிடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்தேறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்னோர் ஏறும் விமானங்கள்' என்றும், ‘...... கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும் ફ્ર કટ * ૯ %. ક . . દ. ૨ છે k > ધ હા வேதப்பயனாம் சைவம் ‘’ என்றும் கூறுவது வியப்பைத் தருகிறது. சண்டேசர் தந்தை யான எச்சத்தத்தன் என்பவன் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்பதையும் பாடுகிறார். இவர்களுடைய கோத்திரம் முதல் அனைத்தையும் தெரிந்துபாடும் சேக்கிழாருக்கு இதில் உள்ள முரண்பாடுகள் தெரியாமல் இருக்க நியாயமில்லை. இந்தப் புராணத்தில் யாகங்கள் பற்றியும், அதனை இயற்றும் வேதியர்பற்றியும் இந்த வேள்விகளைச் செய்து வைக்கும் வேள்வித் தலைவர்கள் தாம் வந்து போவதற்குப் பெரிய தேர்களைப் பயன்படுத்தினர் என்றுங் கூறுவது புதிய செய்தியாகும். யாகத்தில் அவிஷ்பாகம் ஏற்கத் திருமாலும் நான்முகனும் இந்திரனும் வருகிறார்கள் என்று பாடுவதும் புதுமையாகும். வேதவழிப்பட்ட யாகங்களில் நான்முகன் எங்கே வந்தான் என்று தெரியவில்லை? புராண காலத்தில்தான் நான்முகன் தனியிடம் பெறுகிறான். இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது பின்வரும் முடிவுகள் ஒரளவே ஏற்புடையன என்று கொள்ளலாம் என்று தோன்றுகிறது. - 1. udುಖ೩fಹನ! வேதவழக்கொடுபட்ட 21 வகை வேள்வி களைத் தாம் வரவழைத்துக் குடியேற்றின வேதியர்கள்