பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 3 69 'இழுமென் மொழியால் விழுமியது நுவலினும், பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகினும் ' என்று ஆசிரியர் கூறுவதாலும் இவை அனைத்தையுங் காணும் பொழுது தொல்காப்பியனார் காலத்தில் தொடர் நிலைச் செய்யுள் உறுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெறுகின்றது. இவை மறைந்தொழிந்தமையின் இச் சூத்திரங்களின் நேர்ப் பொருளையும் அவற்றிற்கு உதாரணங் களையும் காட்ட முடியாமற் போய்விட்டது போலும். காப்பியம் என்ற சொல்லோ தொடர்நிலைச் செய்யுள் என்ற சொல்லோ தொல்காப்பியனாரால் பயன்படுத்தப்படவில்லை. நெடும் பாடல்கள் வளர்ச்சியே காப்பியம் தோன்ற வழிவகுத்தது சங்கப் பாடல்கள் உதிரிப் பாடல்களாக உள்ளன. பத்துப் பாட்டில் வரும் நெடும்பாடல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்ற பெயரைப் பெறமுடியாது அப்படியானால் திடீரென்று இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் சிலப்பதிகார காப்பியம் எவ்வாறு தோன்றிற்று? திறனாய்வாளர் காப்பியங்களைத் தொடக்க நிலைக் காப்பியம் (Primary Epic) என்றும் இலக்கியக் காப்பியம் (Literary Epic) என்றும் பாகுபாடு செய்வர். ஹோமரின் 'இலியட் போன்றவற்றை முன் பிரிவிற்கும், மில்டனின் 'சுவர்க்க நீக்கத்தை இரண்டாவது பிரிவிற்கும் உதாரணமாகக் காட்டுவர். தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள பழங்காப்பியம் சிலப்பதிகாரமேயாகும். அது முழுத் தன்மை பெற்ற இலக்கியக் காப்பியம் என்பதை அதனை ஒரு முறை கற்றாரும் அறிய முடியும். இத்தகைய ஒர் இலக்கியக் காப்பியம் இரண்டாம் நூற்றாண்டில் தோன்ற வேண்டுமாயின் அதற்கு முன்னர் ஒரு சில தொடக்க நிலைக் காப்பியங்களாவது இருந்திருத்தல் வேண்டும். அவை எங்கே ஒழிந்தன? இதுவரைத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதினவர்கள் யாரும் இத்தகைய வினாக்கட்கு விடைகாண முற்படவில்லை. இலக்கிய வளர்ச்சியில் ஐங்குறுநூறு முதல் அகநானூறு புறநானூறு வரை உள்ள உதிரிப் பாடல்கள் அனைத்தும் அடிச் சிறுமைக்கு ஓர் அளவும் அடிப் பெருக்கத்திற்கு ஓர் அளவும் கொண்டு திகழ்கின்றன. புறநானூற்றில் பாடப்பெற்ற அரசர்கள் சிலர்பற்றியே பத்து பாட்டில் பாடல்கள் சில தோன்றியுள்ளன. என்றால் அந்த மன்னர்கள் காலத்திலேயே புறம்போன்ற சிறு பாடல்களும் மதுரைக் காஞ்சி போன்ற நெடும் பாடல்களும் தோன்றியுள்ளமை தெரிகிறது. புறத்தில் ஒரு மன்னனுடைய