பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 (; ; உதவியுடன் செய்து வந்தனர். பகுஸ்வர்ணம் போன்ற வேள்விகளில்தான் அவர்கள் கவனம் செலுத்தினர். 2. இவ்வாறு இருப்பினும் இத்தமிழகத்தில் பரவியிருந்த சிவவழிபாட்டை அவர்கள் ஒதுக்கவும் முடியவில்லை. 3. சிவவழிபாட்டின் அடிப்படையாக இருப்பவை சிவாகமங்கள். 4. எனவே வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் என்பவற்றுடன் சிவாகமங்களையும் ஒரளவு இணைத்து ஒர் ஒருமைப்பட்ட சமயவழிபாட்டை உருவாக்க முயன்றனர். 5. இந்த வேதவாதிகட்கும், ஆகமவாதிகட்கும் பொது எதிரிகளாக இருந்த சமணர், பெளத்தர் என்பவர்களை இவர்கள் தம்முள்சண்டை இட்டுக்கொண்டு பிரிந்துநின்று வெல்லுதல் முடியாது என்பதை (இருவரும்) உணர்ந் தமையே இந்தப் புது உறவுக்கு மூலமாக அமைந்தது. 6. மகேந்திர வர்மன் காலத்தில் (615-630) இவ்வாறு தனித்தனியே நின்ற வைதிகர்கள், ஆகம சைவர்கள் என்ற கூட்டத்தார் சமண ஆதிக்கத்தை வெல்ல முயற்சி கள் எடுத்ததன் பயனாக இவர்களுக்குள் ஒர் இணைப்பு ஏற்படத் தொடங்கியிருக்கவேண்டும். 7. அதன் பயனாகவே இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் (68.5-720) அவன் கட்டிய காஞ்சிக் கயிலாய நாதர் கோவிலில் தன்னைச் சைவ சித்தாந்தி என்று அவன் கூறிக் கொண்ட நிலைமை உருவாயிற்து. 8. சோழர்கள் கால்த்தில் வைதிக, சைவ வேறுபாடு பெரிதும் மறைந்து, வேதங்களையும் அதன் அங்கங்களை யும் ஆகமங்களுடன் இணைத்து ஏற்றுக் கொள்கின்ற சூழ்நிலை முற்றிலும் நிலைபெற்றுவிட்டது. 9. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சேக்கிழார் இந்த ஒருமைப்பாடு நன்கு சமைந்துவிட்ட நிலையில் தோன்றியவராகலின் தம் காலத்துக்கு ஐந்நூறு ஆண்டு களின் முன் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தை நன்கு அறிந்திருந்தார். திருஞான சம்பந்தர் தாம் ஒருவராகவே நின்று பழைய வைதிக மார்க்கத்தின் அடிப்படையை இந்நாட்டுச் சைவத்துடன் இணையுமாறு செய்து